BREAKING: 'தியேட்டர்களில் 100% இருக்கைகள் அனுமதி இல்லை...' 'இன்னும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு...' - முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு இன்று (08-04-2021) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் அனுமதியில்லை. கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பேருந்து, பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதியளிக்கப்படும், நின்றுகொண்டு செல்ல அனுமதி கிடையாது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுனர் தவிர்த்து மூன்று பயணிகளுக்கு மட்டுமே அனுமதி, ஆட்டோக்களில் ஓட்டுநர்கள் தவிர்த்து இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் நபர்களை கண்காணிக்க தொடர்ந்து இ-பாஸ் முறை செயல்படுத்தப்படும்.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணி வரை வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும். திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதியளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக ராசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்:
அ) இனி திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
ஆ) ஷாப்பிங் மால்கள், கடைகளில் 50% மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதி.
இ) ஆட்டோ, டாக்சிகளில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி.
ஈ) உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளருக்கு மட்டுமே அனுமதி
உ) உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 11-00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.
ஊ) தமிழகத்தில் திருவிழா மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப் 10 முதல் தடை.
எ) இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம்.
ஏ) திருமணத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
ஐ) உள் கூட்டங்கள் 200 பேர் மட்டுமே அனுமதி.
ஒ) கோயில்களில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபட அனுமதி.
ஓ) அரசு தனியார் பேருந்துகளில் நின்று பயணிக்க தடை, சீட்டுகளில் மட்டுமே பயணிகள் அனுமதி.
ஔ) கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்கு தடை, மாவட்டச் சந்தைகளிலும் சில்லறை விற்பனைக்கு தடை.
ஃ) படபிடிப்பில் கலந்துக்கொள்பவர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை, நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயலபட அனுமதி.
மேலும் மாஸ்க், நிலையான வழிகாட்டு முறைகளை சரியாக பின்பற்றி வாடிக்கையாளர்களை அனுமதிக்க வணிக நிறுவனங்கள், உணவகங்கள், டீக்கடைகளுக்கு உத்தரவு. இதைதவிர சுற்றுலா தளங்கள், கேளிக்கை விடுதிகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்