'தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய்...' பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு போன்றவற்றுடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (20-12-2020) அறிவித்தார்.
இதனையடுத்து, பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை இன்று (21-12-2020) வெளியிடப்பட்டது. இதற்காக ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசாக தலா ரூ.2.500 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (21-12-2020) மாலை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திட்டத்தை தொடங்கி வைத்தார். விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
மற்ற செய்திகள்