தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி!.. பின்விளைவுகள் வருமா?.. தடுப்பூசி குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தடுப்பூசியை விஞ்ஞான ரீதியாக அணுக வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி!.. பின்விளைவுகள் வருமா?.. தடுப்பூசி குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

இது குறித்து அவர் கூறியதாவது,

தமிழகத்திற்கு 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்கும் பிரிந்து கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 166 மையங்களில், பதிவுசெய்துள்ள 4.89 லட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி நாளை செலுத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக மருத்துவர்கள், அடுத்தகட்டமாக முன்னிலை பணியாளர்களுக்கு வழங்கப்படும். ஜனவரி 25 முதல் இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

தடுப்பூசியை விஞ்ஞான ரீதியாக அணுக வேண்டும். விருப்பத்தின் அடிப்படையிலே தடுப்பூசி போடுகிறது. பின்விளைவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்