தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா!.. 46 பேர் டிஸ்சார்ஜ்!.. முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், நேற்று 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில், 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.