தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது!.. தொற்று மீண்டும் வேகமெடுப்பதால் பரபரப்பு!.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது!.. தொற்று மீண்டும் வேகமெடுப்பதால் பரபரப்பு!.. முழு விவரம் உள்ளே

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 87,111 ஆண்களும், 55,664 பெண்களும், 23 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,032 ( இன்று 66) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,567 ( இன்று 3,035) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 48,196 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 78,573 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை 16,54,008 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 44,560 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மொத்த பாதிப்பில், 72,699 ஆண்களும், 45,636 பெண்களும், 23 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்