தமிழகத்தின் 5 மாவட்டங்களில் உச்சம் தொடப் போகும் கொரோனா பாதிப்பு!.. தலைமை செயலாளர் 'பரபரப்பு' தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக்ததில் அடுத்த 15 நாட்களில் 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சம் தொடும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் உச்சம் தொடப் போகும் கொரோனா பாதிப்பு!.. தலைமை செயலாளர் 'பரபரப்பு' தகவல்!

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு தலைமை செயலளார் சண்முகம் பதிலளித்துள்ளார்.

அதில் அடுத்த 15 நாட்களில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா உச்சம் தொடும் என்றுள்ளார். மேலும், அந்த மாவட்டங்களில் மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 6,000 ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நன்றி: நியூஸ் 18 தமிழ்

 

மற்ற செய்திகள்