பல்லாவரம், வண்டலூர் மேம்பாலங்களை 'திறந்து' வைத்து... சென்னை மக்களுக்கு 'குட் நியூஸ்' சொன்ன முதல்வர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.55 கோடியில் 711 மீட்டர் நீளம், 23 மீ அகலம் கொண்ட 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

Tamil Nadu CM Palaniswami inaugurated Vandalur Bridge

பல்லாவரம், வண்டலூர் மேம்பாலங்களை 'திறந்து' வைத்து... சென்னை மக்களுக்கு 'குட் நியூஸ்' சொன்ன முதல்வர்!

தைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் , ''வண்டலூர் மேம்பாலம் மூலம் கேளம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும். கோயம்பேடு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,'' என்றார். இதேபோல பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலை, சந்தை சாலை, குன்றத்தூர் சாலை ஆகிய சந்திப்புகளை இணைத்து ரூ.82 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

Tamil Nadu CM Palaniswami inaugurated Vandalur Bridge

இந்த பாலங்களால் பல்லாவரம், வண்டலூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் கோயம்பேடு மேம்பாலமும் திறக்கப்படும் பட்சத்தில் சென்னையில் கணிசமான அளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்