தாயார் மறைவு.. ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன முதல்வர் முக.ஸ்டாலின்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வதை இன்று அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | நம்ம ரோஹித்தா இது?.. மச்சான் கல்யாணத்தில் தாறுமாறு ஸ்டெப் போட்ட ரோஹித் ஷர்மா.. வைரலாகும் வீடியோ.!
தாயார் மறைவு
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய அவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது 96. இதனையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
ஓபிஎஸ் தாயார் மறைவையடுத்து தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது இரங்கலை தெரிவித்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners.
நேரில் சென்ற முதல்வர்
தாயார் மறைவிற்கு பிறகு பொது விவகாரங்களில் இருந்து ஒதுங்கியே இருந்த ஓ.பன்னீர் செல்வம், நேற்று சென்னை திரும்பியிருந்தார். இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று சென்னை பசுமை வழிசாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் தாயார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.
இந்த சந்திப்பில் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய முதல்வரை ஓபிஎஸ் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
Images are subject to © copyright to their respective owners.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்,"முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் அன்புத் தாயார் பழனியம்மாள் அவர்கள் சமீபத்தில் மறைந்ததையொட்டி, மாண்புமிகு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களுடன் பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணன் பன்னீர்செல்வம் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்