'உடல்நலக்குறைவு மற்றும் விபத்து காரணமாக உயிரிழந்த காவலர்கள்'... 'ரூ.3 லட்சம் நிதியுதவி'... முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

'உடல்நலக்குறைவு மற்றும் விபத்து காரணமாக உயிரிழந்த காவலர்கள்'... 'ரூ.3 லட்சம் நிதியுதவி'... முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், ''தமிழகத்தில் விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும்.

அந்தவகையில் விபத்து மற்றும் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்'' என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்