'முக்கிய பொறுப்பில் தமிழக திருநங்கை'... 'உணவு நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரியில் முதன்மை நிறுவனமான ஸ்விக்கி, முதல் முறையாகத் திருநங்கை சம்யுக்தா விஜயனை, முதன்மை திட்ட மேலாளராக நியமித்துள்ளது.

'முக்கிய பொறுப்பில் தமிழக திருநங்கை'... 'உணவு நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்'!

தொழில்நுட்ப வல்லுநரான சம்யுக்தா விஜயன் தமிழகத்தின் பொள்ளாச்சியில் பிறந்தவர். இவர், முன்னதாக அமேசான் நிறுவனத்தில் சில வருடங்கள் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், ஃபேஷன், வடிவமைப்பு, ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் போன்றவற்றில் திருநங்கைகள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான டவுட்ஸ்டூடியோ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடகளுக்கு சென்று பேஷன் டிசைனராக இருந்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்த இவர், தற்போது ஸ்விக்கி நிறுவனத்தில் (Principal Program Manager) முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார். ‘பிசினஸ் இன்சைடர்’ என்ற ஊடகத்துக்குப் பேட்டியளித்த சம்யுக்தா, ‘இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது திருநங்கைளுக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் திருநங்கைகளுக்கான ஆதரவு குழுக்களையும் நிறுவனத்தில் கட்டமைக்க வேண்டும். பல திருநங்கைகள் சரியான கல்வித் தகுதிகளுடன் இருப்பதில்லை. எனக்கு குடும்பத்தின் ஆதரவு இருந்தால் கல்வி, பிற கூடுதல் பாடத்திட்டங்களில் கவனம் செலுத்த முடிந்தது.

தற்போது பொருளாதார ரீதியாக யாருடைய ஆதரவும் இல்லாமல் நான் உள்ளேன். அதனால் பிற திருநங்கைகளுடன் ஒப்பிடும் போது எனக்குச் சவால்கள் வேறு விதமாக இருந்தது. திருநங்கையை அனைத்து துறைகளிலும் பணியாற்றுவதற்கான ஆற்றல் உள்ளது. ஆனால் தேவையான தகுதிகளில் தான் சிக்கல் உள்ளது. எனவே இன்டர்ன்ஷிப் அல்லது பிற பயிற்சிகள் மூலம் சரியான அறிவை அளிக்கும் போது திருநங்கைகள் வேலைவாய்ப்பை எளிதாகப் பெறுவார்கள்’ என்று கூறினார்.

TRANGENDER, SWIGGY, CHENNAI