"இறந்துபோன தம்பி.. ஃபோட்டோ முன்னாடிதான் தாலி கட்டுவேன்.." .. கலங்க வைத்த பாசம்.!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் மனிதர்கள் மனிதர்கள் மீது பாசம் காட்டினாலும் கூட, உடன் பிறந்தோர் மீது அவர்கள் செலுத்தும் அன்பும் பாசமும் அனைத்தையும் மீறிதாகவே இன்னும் இருக்கிறது.
குடும்ப உறவுகளில் சகோதர உறவு என்பது எல்லா காலங்களிலும் வலுவான ஒரு உறவாக பொதுவான இந்திய சமூகத்தால் பார்க்கப்படுகிறது. குறிப்பாக வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் உடன்பிறந்தவர்களின் உறுதுணையும் ஆலோசனையும் இந்திய பொது சமூகத்தில் இருக்கும் பாசப்பிணைப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
சொந்த பந்தங்களுக்கு அழைப்புவிடுத்து, வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் நடத்தப்படும் விசேஷங்களில் குடும்ப உறுப்பினர்களுள் ஒருவர் புகைப்படங்களில் இல்லை என்றால் கூட ஒரு கணம் நிகழ்வை நிறுத்திவிட்டு, விடுபட்ட அந்த குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து புகைப்படம் எடுக்கும் அளவுக்கு பாசகார பெருமக்கள் நம்மூரில் இருக்கின்றனர்.
அந்த வகையில் சமீப காலங்களில் மறைந்த பெற்றோர், மறைந்த உடன்பிறந்தோர் என குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களை சிலையாக வடித்து, அவர்களது முன்னாள் திருமணம் உள்ளிட்ட விஷயங்களை நிகழ்த்துவது நிகழ்ச்சிதாரர்களுக்கு சற்றே ஆறுதலாக இருக்கிறது, பெரும் மனம் நிம்மதியாகவும் இருக்கிறது.
இங்கும் ஒரு திருமணத்தில், இறந்துபோன தம்பியின் முன்னால்தான் தாலி கட்டுவேன் என்று பிடிவாதமாய் ஒரு அண்ணன், மறைந்த தம்முடைய தம்பியின் புகைப்படத்துக்கு முன்னால் நின்று மணப்பெண்ணுக்கு தாலிகட்டும் வீடியோ ஒன்று பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்கியுள்ளது. காண்போர் நெஞ்சை கலங்க வைக்கும் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது உறவுகளின் உன்னதம் எவ்வளவு மேம்பட்டதாக இருக்கிறது என்று விளங்கும் வகையில் இருப்பதாக பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.
Also Read | 777 சார்லி படத்த பார்த்துட்டு கதறி அழுத கர்நாடக முதல்வர்.. அவரே கொடுத்த எமோஷனல் பேட்டி.! காரணம் இதுதானா.?
மற்ற செய்திகள்