Breaking: 'தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் மறைந்தார்...' - அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார். அவருக்கு வயது 61.

Breaking: 'தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் மறைந்தார்...' - அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருப்பவர் எஸ்.பி.ஜனநாதன். தற்சமயம் விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் கடந்த வியாழன் (11-03-2021) அன்று மதியம் எடிட்டிங் பணிகள் நடைபெற்ற போது, மதியம் வீட்டிற்குச் உணவருந்த சென்றுள்ளார். மீண்டும் எடிட்டிங் பணிக்கு நீண்ட நேரமாக வரவில்லை, சந்தேகமடைந்த அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கே அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

     

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதனை செய்தார்கள். அவரது மூளையில் ரத்தக் கசிவு அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவருடைய உயிர் பிரிந்தது. எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இயக்குநராக வேண்டும் என்று ஆசை கொண்டு பி.லெனின், பரதன், வின்சென்ட் செல்வா மற்றும் கேயார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் 'இயற்கை' இந்த திரைப்படம் 2003-ல் வெளிவந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் தீவிர இடதுசாரி சிந்தனையை தன் கலை அழகியலோடு தன் சினிமாவில் காட்சி படுத்தியவர். தான் சார்ந்த அரசியல் கருத்துக்களை சொல்வதற்காகவே திரைப்படம் எடுப்பதாக தொடர்ந்து கூறிவந்தார். அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே இடதுசாரி சிந்தனைகளுடன் கூடிய புரட்சிகர கருத்துகளை உள்ளடக்கியவை. 

எஸ்.பி.ஜனநாதனின் மறைவு தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பு ஆகும். அவருடைய உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

அவருக்கு behindwoods சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மற்ற செய்திகள்