தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்களுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது.. தமிழ்நாடு விழாவில் வழங்கி ‘கௌரவித்த’ முதல்வர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்களுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது.. தமிழ்நாடு விழாவில் வழங்கி ‘கௌரவித்த’ முதல்வர்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 25.7.2014 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் வளர்ச்சிக்காகத் தனி ஆளாகத் தொண்டு செய்தும், தமிழ் அமைப்பு வைத்துத் தமிழ் மொழிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது ஆண்டுதோறும், ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்றவாறு வழங்கப்படும் என்றும், இவ்விருது பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான விருதுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி 2019ம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருது 37 தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் 19 விருதாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று தமிழ்ச் செம்மல் விருது, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார். தமிழ்ச் செம்மல் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட இதர விருதாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் அமைச்சர்களால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்