'இப்படியெல்லாம் பேசு'... 'இளம்பெண்ணுக்கு எடுத்து கொடுத்த நிச்சயம் செய்யப்பட்ட பையன்'... வலையில் விழுந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிச்சயம் செய்யப்பட்ட பையனுடன் சேர்ந்து கொண்டு, இளம்பெண் செய்த பகிர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இப்படியெல்லாம் பேசு'... 'இளம்பெண்ணுக்கு எடுத்து கொடுத்த நிச்சயம் செய்யப்பட்ட பையன்'... வலையில் விழுந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு'கடந்த 6 மாதத்திற்கு முன்பு முகநூல் மூலம், திருச்சி காஜாமலையைச் சேர்ந்த ரகமத்நிஷா என்ற பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் ரகமத் நிஷாவுக்கும், காஜாமலையைச் சேர்ந்த அன்சாரி ராஜா என்ற வாலிபருக்கும் கடந்த 3ம் தேதி திருமணம் முடிவானது.

அன்சாரி ராஜா, டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து வேலைக்குச் செல்லாமல், கல்யாணம் செய்துகொள்ள இருக்கும் ரகமத்நிஷா மற்றும் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து முகநூல் மூலம் நட்பாகப் பழகி பணம் பறிக்கும் செயலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் ரகமத்நிஷாவுடன் பேச ஆரம்பித்த வினோத்குமாரிடம் ஆசை வார்த்தைகளையும், ஆபாசமாகவும் பேச அன்சாரி ராஜா ஐடியா கொடுத்துள்ளார். அதன்படி ரகமத்நிஷா பேசிய நிலையில், அவரின் ஆசை வார்த்தைகளை நம்பிய வினோத் குமார் உன்னைப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதற்கு ரகமத்நிஷாவும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த 5-ந் தேதி ரகமத்நிஷாவை சந்திக்கும் ஆசையில் வினோத்குமார் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி வந்தார். திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானம் இருக்கும் இடத்திற்கு அவர் வந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்தி சென்று ரூ.1 லட்சம் கேட்டு சித்ரவதை செய்து, அவரது மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டது. இதுகுறித்து வெளியில் சொன்னால் உனது மானம் தான் போகும் என அந்த கும்பல் மிரட்டியுள்ளது.

இருப்பினும் வினோத் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், ரகமத்நிஷா மற்றும் அவரது கூட்டாளிகள் ஆசீக் என்ற நிவாஷ், மற்றும் திருச்சி பாலக்கரை கீழபடையாச்சி தெருவைச் சேர்ந்த முகமது யாசர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட  ரகமத்நிஷாவின் வருங்கால கணவர் அன்சாரி ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் விசாரணை நடத்தி, 5 பேரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அன்சாரி ராஜா மற்றும் காஜாமலை பி.வி.எஸ். நகரைச் சேர்ந்த காஜாமைதீன் மகன் அன்சாரி பிலால் ஆகிய 2 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் அன்சாரி பிலால், திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

மேலும் 3 பேரை போலீசார் தேடி வரும் நிலையில், இந்த கும்பல் வேறு யாரை எல்லாம் இதுபோன்று ஏமாற்றி இருக்கிறார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்