'பொது வெளியில்' குப்பை போட்டால் 'ரூ. 1000 அபராதம்'... குப்பை போடுவதை 'படம்' எடுத்து அனுப்பினால் 'ரூ.500 பரிசு'... இந்த 'டீலிங்' நல்லாருக்கே...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை மாவட்டம் முத்துக்கவுண்டம்புதூர் உராட்சியில் பொதுவெளியில் குப்பை கொட்டுபவர்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால் 500 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

'பொது வெளியில்' குப்பை போட்டால் 'ரூ. 1000 அபராதம்'... குப்பை போடுவதை 'படம்' எடுத்து அனுப்பினால் 'ரூ.500 பரிசு'... இந்த 'டீலிங்' நல்லாருக்கே...

முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவராக சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஊராட்சி கூட்டத்தில் ஊரை சுத்தமாக வைப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது. இதனையொட்டி ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே  பிளக்ஸ் பேனர்கள்  வைக்கப்பட்டுள்ளன.

அதில், பொதுவெளியில் குப்பை கொட்டுபவர்களிடம் கண்டிப்பாக ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் குப்பைகளை போடுபவர்களை  புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து ஊராட்சிக்கு கொடுக்கும் நபர்களுக்கு 500 ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

COIMBATORE, DUMPING TRASH, PUBLIC, RS. 500 GIFT