T Rajendar : “இந்தி இல்லாம வாழ முடியுமா?”.. பாரத் மாதாகீ ஜே!”.. உணர்ச்சி முழக்கத்துடன் தன் ஆல்பத்தை வெளியிட்ட டி.ராஜேந்தர் | Vande Vande Maatharam

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் டி.ராஜேந்தர் உருவாக்கியுள்ள தனியிசை பாடலில் தமது பேரனை பாடகராகவும் நடிகராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

T Rajendar : “இந்தி இல்லாம வாழ முடியுமா?”.. பாரத் மாதாகீ ஜே!”.. உணர்ச்சி முழக்கத்துடன் தன் ஆல்பத்தை வெளியிட்ட டி.ராஜேந்தர் | Vande Vande Maatharam

நடிகரும் இசையமைப்பாளரும் இயக்குனருமான டி.ராஜேந்தர், டி.ஆர் ரெக்கார்ட்ஸ் எனும் தமது இசை நிறுவனத்தின் சார்பில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் எழுதி, இசையமைத்து 'வந்தே வந்தே மாதரம்' என்னும் இசை ஆல்பத்தை தயாரித்து குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியீட்டுள்ளார்.

இவ்விழாவில் பேசிய டி.ராஜேந்தர், “என் வாழ்க்கையில் முக்கியமான நாள் இது. உணர்வுள்ள மனிதன்தான் உணர்ச்சிவசப்பட முடியும். இயக்குநர், இசையமைப்பாளர் என என் பல படங்களுக்கு ப்ளாட்டினம் டிஸ்க் வாங்கி பெற்றிருக்கிறேன். நான் ட்யூன் பேங்கே வைத்துள்ளேன். இன்னும் பல பாடல்களை டி.ஆர். ரெக்கார்ட்ஸ் வெளியிட ஆரம்பித்துள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசியவர் தன்னுடைய தமிழ் இந்தி இருமொழி புலமைகள் குறித்தும், ஆர்வம் குறித்தும் பேசியவர், தமிழிலும் இந்தியிலும் பாடல்களை தாம் உருவாக்க்குவது எப்படி என்பது குறித்து விளக்கினார். 

தொடர்ந்து பாரத மாதாகி ஜே என்று சொன்னால் பிஜேபி என்று சொல்வது பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு, “ஜெய்ஹிந்த் என்று சொன்னால் காங்கிரஸ் என்று சொல்லி விடலாமா?. வாஜ்பாய் காலத்தில் இருந்தே எனக்கு இந்தி தெரியும். ரூபாய் நோட்டில் அனைத்து மொழிகளும் உள்ளது, ரயிலில் இந்தி இருக்கிறது என்பதற்காக அதில் நாம் யாரும் போகாமல் இல்லை, இந்தி இல்லாமல் வாழ முடியுமா?” என கேட்டுள்ளார்.

தொடர்ந்தவர், நியூயார்க் சென்றபோது கர்நாடகாவை சேர்ந்தவர்கள், வட இந்திய மருத்துவர்கள், கேரள மக்கள், தெலுங்கு மக்கள் அனைவரும் தன்னை தமிழன் என பார்க்காமல், இந்தியன் என பார்த்து அக்கறையுடன் கவனித்துக் கொண்டதால், தான் மறுஜென்மம் எடுத்ததாகவும் குறிப்பிட்டு, “அப்போதுதான் நான் ஒரு இந்தியன், ஹமாரா தேஷ் இந்தியா என உணர்ந்தேன், எவ்வளவோ பாட்டை பண்ணியிருக்கிறேன் இந்த வந்தே வந்தே மாதரம் பாடலை என் தேசத்துக்காக பாடியுள்ளேன். பள்ளிக்குழந்தைகளுக்கு தேசிய ஒருமைப்பாடு உணர்வை ஊட்டுவதற்கும் பல பாடல்களை திட்டமிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.” என பேசினார்.

மேலும் கலைஞரின் ஆட்சி காலத்தில், சட்டமன்ற உறுப்பினராக இருந்த தான் 'மோனிஷா என் மோனலிசா' (Monisha En Monalisa) படம் மூலம் பான் இந்தியா படத்தை முயற்சித்ததாகவும் தெரிவித்தார்.  குறிப்பாக, ஈழத்தமிழர்கள் தான் தனது இன்ஸ்பிரேஷன் என கூறியவர், அவர்கள் தம் தாய்மொழி தமிழ் என்றாலும் அனைத்து மொழியிலும் பேசுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், “அடுத்து தாய்நாட்டுக்காக தமிழ்தேசத்துக்காக ஒரு பாடலை உருவாக்கவிருக்கிறேன், அதை நான் இப்போது சொல்ல மாட்டேன்” என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்திருந்தார்.

Also Read | “அப்பவே பான் இந்தியா படம் .. இப்பவும் முயற்சித்தேன்.. ஆனா உடல்நிலை...” - பேசும்போது  கண்கலங்கிய டி.ராஜேந்தர்.!

T RAJENDAR, VANDE VANDE MAATHARAM, T.RAJENDAR PATRIOTIC SONG

மற்ற செய்திகள்