'காசையோ .. போனையோ'.. பிடுங்கி வெச்சுக்கிட்டு 'மிரட்டுவாங்க'.. ஸ்விகி பாய்ஸின் சோகங்கள்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆன்லைனில் ஆர்டர் பண்ணுபவர்களுக்கு, குறித்த நேரத்தில் உணவை டெலிவரி செய்துவிட்டு, அடுத்த டெலிவரியை நோக்கி புறப்பட்டு, தன் உயிருடலை பணையவைத்து பறக்கும் ஸ்விகி பாய்ஸிடம் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் எடுத்த பிரத்யேக பேட்டியில் அவர்கள் பகிர்ந்துகொண்ட பல விஷயங்கள் நெஞ்சை நெகிழவைத்துள்ளன.

'காசையோ .. போனையோ'.. பிடுங்கி வெச்சுக்கிட்டு 'மிரட்டுவாங்க'.. ஸ்விகி பாய்ஸின் சோகங்கள்.. வீடியோ!

அவர்கள் பேசும்போது,‘இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை ஸ்விகி உணவு டெலிவரியில், பணிபுரிகிறோம். ஆனால் எங்களைப் போன்ற இளைஞர்கள் பலர், மிரட்டுவார்கள், கையில் இருக்கும் காசையோ போனையோ பிடுங்கிக் கொண்டு மிரட்டுவார்கள். சேஞ்ஜ் இல்லையென்றால் சாட் பாக்ஸில் சொல்லலாம். ஆனால் சேஞ்ஜ் இல்லனா எதுக்கு வேலைக்கு வர்றீங்க? என்று கேட்பார்கள். பல மால்களில் இந்த உணவு டெலிவரி கம்பெனி யூனிஃபார்முடன் சென்றால் உள்ளே விடாமல் வேறு கேட் வழியாக வரச் சொல்வார்கள்.

பெரிய அபார்ட்மெண்டுகளை பொருத்தவரை, 1 கி.மீ தூரம் நடந்து சென்று பல மாடிகள் கடந்து செல்வதற்குள் 1 மணி நேரம்வரை ஆகிவிடுகிறது. இன்னொரு ஆர்டரை டெலிவரி பண்ண முடிவதில்லை. கொஞ்சம் பாதி தூரம் கிட்ட வருமாறு கேட்டாலே போதும், உங்க வேல டோர் டெலிவரிதானே? என்று ஹார்ஷாக பேசுவார்கள். அதையும் மீறி டோர் டெலிவரி செய்த பிறகும் புகார் அளித்துவிடுவார்கள்.

ஆர்டர் தாமதமானால், கத்துவார்கள் என விரைவாகச் செல்கிறோம். ஆனால் இரவு 11 மணிக்கு வெகுவேகமாகச் சென்றால், நாய்கள் அச்சுறுத்தல் இருக்கு. சில இடங்களில் உள்ளேயே விடாமல், வெளிய ரோட்ல நில்லு என்றெல்லாம் பேசுவார்கள். டிராஃபிக்கில் விதிகளை மீறுவது, தவறுதான். ஆனால் கஸ்டமரின் பசி நேரத்தில் சரியாக எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பதாலேயே வேகமாகவும் சில சமயம் செல்கிறோம். அது கஸ்டமரின் லொகேஷனைப் பொறுத்தது. சில சமயம் கஸ்டமர் லொகேஷனை தவறாகக் கொடுத்துவிடுவார்கள். இதெல்லாம் சிரமம்தான்.

சில நேரங்களில் பலரும் எங்களுக்கு வழிகொடுத்து, ஒரு ஆம்புலன்ஸ்க்கு முன்னுரிமை கொடுப்பது போல, எங்களை அனுப்புவதில் முனைப்பு காட்டுவார்கள். நிறுவனம் எங்கள் குடும்பங்களுக்கு இன்சூரன்ஸும் செய்திருக்கிறது’ என்று கூறுகிறார்கள்.

HUMANITY, FOOD, DELIVERY BOYS, ORDER, ONLINE FOOD, SWIGGY, TRAVEL