'முன்னாள் முதல்வரின் பேரனுக்கும் உணவு டெலிவரி பாய்க்கும் கைகலப்பு'! ... ‘சென்னையில் பரபரப்பு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மதராஸ் மாகாணமாக இருந்தபோது, முதலமைச்சராக இருந்தவர் முனுசாமி நாயுடு. இவரது கொள்ளுப்பேரன் பாலாஜி என்பவர் தற்போது சென்னை அசோக் நகரில் வசித்து வருகிறார்.
ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்துவரும் பாலாஜி, ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது ஆர்டரைப் பெற்றுக்கொண்ட ஸ்விக்கி பாய் ராஜேஷ்கண்ணா என்பவர் பாலாஜிக்கு உணவை டெலிவரி செய்யும்போது அட்ரஸ் விசாரிக்கும் விஷயத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த வாய்த்தகராறு முற்றிப்போய் கைகலப்பாக மாறியிருக்கிறது. இந்த சமயத்தில் அங்கு வந்த மேலும் 3 ஸ்விக்கி ஊழியர்கள் மற்றும் டெலிவரி பாய் ராஜேஷ்கண்ணாவின் தந்தை தனசேகரன் அனைவரும் சேர்ந்து பாலாஜியாகத் தாக்கியதாக அசோக் நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் மடிப்பாக்கத்தில் பெண் ஒருவரிடமும் தகாத முறையில் பேசியதாகவும் உணவு டெலிவரி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.