‘இதை நான் எதிர்பார்க்கவே இல்ல’!.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் ‘மிக’ உயரிய விருது அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ (Dadasaheb Phalke Award) விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (25.10.2021) டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று ரஜினிகாந்த் டெல்லிக்கு பயணிக்க உள்ளார்.
இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘தாதா சாகேப் பால்கே விருது எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் பாலசந்தர் சார் இல்லையே என்று மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை’ என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திரையுலகினர் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்