சொத்து குவிப்பு வழக்கில் அதிரடி திருப்பம்!.. சசிகலாவை அடுத்து... சிறையில் இருந்து சுதாகரன் பரபரப்பு கடிதம்!.. புதிய தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சுதாகரன், சிறைக்காலம் முன்கூட்டியே முடிவடைந்து விட்டதால் விடுதலை செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உடன் சுதாகரனும் சேர்க்கப்பட்டிருந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சுதாகரனும் நான்கு ஆண்டுகள் தண்டனைப் பெற்று சிறையில் உள்ளார்.
இந்நிலையில், சிறைக்காலம் முன்கூட்டியே முடிவடைந்து விட்டதால், விடுதலை செய்ய வேண்டும் என சுதாகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக 1997-ல் 90 நாட்கள் சிறையில் இருந்து உள்ளேன் எனத் தெரிவித்துள்ள்ளார்.
சுதாகரன் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு சிறை தண்டனையையும், அபராதத்தையும் விதித்தது. பின்னர், பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு நான்காண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் அவர் மீதான வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்