VIDEO: ஒவ்வொரு தடவையும் 'இப்படி' பண்றது 'வேதனையா' இருக்கு...! இதான் 'பெண்களுக்கு' கொடுக்குற மதிப்பா...? - பிரதமரிடம் உதவி கேட்டு நடிகை சுதா சந்திரன் 'வீடியோ' வெளியீடு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் திரைப்பட உலகின் நடிகை மற்றும் நடன கலைஞராக இருப்பவர் நடிகை சுதா சந்திரன். இவர் விமான நிலையத்தில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் கூறும்போது, 'பிரதமர் மோடிக்கு வணக்கம். நான் இந்திய அரசுக்கும், உங்களுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நான் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் நடன கலைஞர். எனக்கு செயற்கை மூட்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை மூட்டோடு நடனம் ஆடி நான் பெரிய சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளேன்.
நான் ஒவ்வொரு தடவை விமானத்தில் பயணம் செய்யவேண்டிய நிலை வரும்போதும் இங்கு நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. சிஐஎஸ்எப் அதிகாரிகள் மூலம் ஒவ்வொரு முறை விமான நிலைய சோதனைக்கு உட்படும் போதும் என்னுடைய செயற்கை மூட்டையும் சேர்த்தே "ஈடிடி டிடக்டர்" சோதனை (வெடிகுண்டு சோதனை) செய்ய சொல்வேன்.
ஆனால், அவர்களோடு என்னுடைய செயற்கை மூட்டு பொருத்தப்பட்டதை கழட்டி எடுத்து காட்ட சொல்வார்கள். என்னுடைய செயற்கை மூட்டை நான் எப்படி எடுத்து வெளியே காட்ட முடியும்? இதுபோன்று பல முறை எனக்கு நடந்துள்ளது.
இதை நான் எனக்காக மட்டும் சொல்லவில்லை. என்னைப்போன்று உள்ள அனைவருக்காகவும் தான் சொல்கிறேன். மோடிஜி, இதுதான் நம்முடைய நாட்டில் பெண்களுக்கு அளிக்கப்படும் மதிப்பா?.
மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வயதை அறிவிக்கும் வகையில் சீனியர் சிட்டிசன் என்ற சிறப்பு அட்டையை வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் நடக்கும் இந்த சோதனை எனக்கு வருத்தத்தை கொடுக்கிறது.
என் இந்த கோரிக்கை உங்களிடம் வந்தடையும் என்றும், உடனே இதில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்புகிறேன்' என உருக்கமான கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்