'மே 7ம் தேதி பதவியேற்பு'... 'ஸ்டாலின் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடம்'... எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சுகாதாரத்துறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதையடுத்து, புதியதாகப் பொறுப்பேற்க உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகச் சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மே 7 ஆம்தேதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக நேற்று தேர்வு அவர் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரில் லால் புரோகித்தை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற 133 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அளித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அத்துடன் புதிய அமைச்சர் பட்டியலையும் ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார்.
அதன்படி நாளை மறுநாள் காலை 9 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதையடுத்து, புதியதாகப் பொறுப்பேற்க உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
- நெடுஞ்சாலைத்துறை- எ.வ.வேலு
- சுகாதாரத்துறை - மா.சுப்பிரமணியன்
- நீர்ப்பாசனத்துறை - துரைமுருகன்
- உள்ளாட்சித்துறை - கே.என்.நேரு
அதிகாரிகள் - உத்தேசப் பட்டியல்
- தலைமைச்செயலாளர் - இறையன்பு
- முதல்வரின் தனிச்செயலர் - உதயச்சந்திரன்
- முதல்வரின் தனிச்செயலர் - உமாநாத்
- முதல்வரின் தனிச்செயலர் - எஸ்.எஸ். சண்முகம்
இதற்கிடையே தற்போதைய கொரோனா சூழ்நிலையில் சுகாதாரத்துறை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மற்ற செய்திகள்