‘10-ம் வகுப்பு தேர்வு எதற்காக ரத்து செய்யப்படவில்லை’... ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படாததற்கான காரணம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

‘10-ம் வகுப்பு தேர்வு எதற்காக ரத்து செய்யப்படவில்லை’... ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்’!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வுகள், மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைப்பெறுவதாக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், கொரோனா தொற்று நிலைமையை தலை கீழாக்கி விட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, 1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாமலேயே ஆல் பாஸ் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு வருடம் முழுவதும், தூக்கமின்றி படித்த 10-ம் வகுப்பு மாணவர்கள், தங்களுக்கு தேர்வு நடக்குமா? இல்லையா? என பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவது அவசியம். ஒருவர் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான முக்யிமான தேர்வாகும். மேலும், அனைத்து பணிகளுக்குமான அடிப்படையாக 10-ம் வகுப்பு தேர்வு உள்ளது. ஆகையால் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேற்படிப்பு, வேலை, அரசு வேலைக்கான தேர்வுகள் என எங்கு சென்றாலும், 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படை காரணியாக இருந்து வருகிறது. இவற்றிற்கு மேலாக, 11-ம் வகுப்புக்கு செல்கிற மாணவனாக இருந்தால் ‘ஆல் பாஸ்’ பிரச்னையில்லை. ஆனால் , ஐடிஐ, பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு மிக அவசியமான ஒன்று. பி.எட். முடித்து ஆசிரியர் தேர்வெழுதுபவர்களுக்கு, கட் ஆஃப் மதிப்பெண்ணில் 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படும் உள்ளிட்ட காரணங்களால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.