'இப்படியா நடக்கணும்'.. ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஆசையாக ஓடிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவர், பள்ளியில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தீபத்தை ஏற்றிச் செல்லும்போது ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்த சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

'இப்படியா நடக்கணும்'.. ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஆசையாக ஓடிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

கடந்த ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி, 3 பள்ளிகள் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு தனியார் பள்ளி மைதானம் ஒன்றில் நடத்திய விளையாட்டுப் போட்டியின் போது, ஒலிம்பிக் தீபத்தை அப்பள்ளியில் பயின்று வந்த 12-ஆம் வகுப்பு மாணவரான விக்னேஷ் என்பவரிடம் கொடுத்து மைதானத்தை சுற்றி ஓடவிட்டனர்.

ஆனால் அந்த தீப்பந்தத்தை எரியூட்டுவதற்காக மண்ணெண்ணெய்க்கு பதில் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மாணவர் மீது காற்றில் பறந்து தீபட்டு, மாணவர் உடல் கருகி தீ விபத்துக்குள்ளாகினார். பின்னர் செங்கல்பட்டு மருத்துவமனையிலும், அதன் பின் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

எனினும் சிகிச்சைப் பலனின்றி மாணவர் விக்னேஷ் உயிரிழந்ததை அடுத்து மாணவருக்கு உரிய பயிற்சி அளிக்காமல் ஒலிம்பிக் தீப்பந்தத்தை பிடித்துக்கொண்டு ஓடவிட்டது, தீயணைப்பானை தயார் நிலையில் வைக்காதது என பள்ளி நிர்வாகத்தின் மீது பல்வேறு கட்ட போலீஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.