சொந்தக்காரரின் காரில் ஓட்டிப் பழகிய இளைஞர்கள்.. எதிர்பாராமல் நடந்த விபரீதம்.. திருப்பூர் அருகே சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நண்பர்களுடன் கார் ஓட்டி பழகும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொந்தக்காரரின் காரில் ஓட்டிப் பழகிய இளைஞர்கள்.. எதிர்பாராமல் நடந்த விபரீதம்.. திருப்பூர் அருகே சோகம்..!

சந்தையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலம்.. திருப்பூரில் அடுத்த அதிர்ச்சி..!

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த, குமார் என்பவரது மகன்கள் தமிழ்வாணன் (வயது 17), ஸ்ரீதர் (வயது 15). இவர்கள் இருவரும் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது உறவினருக்கு சொந்தமான காரில், நண்பர்களான கோபி சங்கர் (வயது 17), லெனின் ராஜ் (வயது 17), ஹரி கிருஷ்ணன் (வயது 17), தினேஷ் குமார் (வயது 17) ஆகிய 6 பேரும் கார் ஓட்டிப் பழகுவதற்காக பல்லடம்-மங்கலம் சாலையில் சென்றுள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார்

அம்மாபாளையம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் வலது புறம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காரில் பயணித்த தமிழ்வாணன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

Student dies in car accident while driving practice with friends

மருத்துவமனை

மற்ற 5 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

மேலும் விபத்தில் உயிரிழந்த தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEO: செல்போனை பார்த்திட்டே ஓட்டைக்குள் விழுந்த வாலிபர்.. நல்லவேளை கீழே அது இருந்ததுனால பொழச்சிட்டாரு..!

STUDENT, CAR ACCIDENT, DRIVING PRACTICE WITH FRIENDS, திருப்பூர், கார் ஓட்டி பழகும் போது நடந்த விபரீதம், மருத்துவமனை

மற்ற செய்திகள்