‘இன்னைக்கு அவனுக்கு எக்ஸாம்ங்க’..கண்ணீருடன் பெற்றோர் கதறல்.. மின்வாரியம் அலட்சியத்தால் சிறுவன் பலியான பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விளையாடி கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள ஒதனட்டி என்ற கிராமத்தில் சசிகுமார்-வைதேகி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரவீன்(14) மற்றும் நவீன்(8) என்ற இரு மகன்கள் உள்ளனர். அதில் பிரவின் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவருக்கு தேர்வுக்கு படிக்க ஸ்டடி லீவு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரவின் வீட்டின் மாடியில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது சட்டையில் கம்பி ஒன்று மாட்டியதால் குனிந்து எடுக்கும் போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் கழுந்து உரசி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதில் பிரவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது அப்பகுதியில் யாரும் இல்லாததால சுமார் 1 மணி நேரமாக மின் கம்பியில் தொங்கிய படியே பிரவின் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அந்த வழியே வந்த மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக மின்வாரியத்துக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து சம்வ இடத்துக்கு வந்த போலிஸாரும், மின்சார ஊழியர்களும் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இது குறித்து தெரிவித்த அப்பகுதி மக்கள்,‘இப்பகுதியில் மின்கம்பிகள் மிக தாழ்வாக உள்ளதால், இதை சரி செய்ய சொல்லி மின்வாரிய ஊழியர்களிடம் பலமுறை தகவல் கொடுத்தும் பயனில்லை. இதனால் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழக்க நேர்ந்துள்ளது’ என தெரிவித்துள்ளனர். மேலும்‘இன்னைக்கு அவனுக்கு எக்ஸாம், ஆனா அவன் இல்லையே’ என சிறுவனின் இழப்பை பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர்.