'நாளையிலிருந்து ஊரடங்குன்னா என்னன்னு தெரியும்'... 'கடுமையான நடவடிக்கைகள்'... சென்னை காவல்துறை ஆணையர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொதுமக்கள் ஊரடங்கை முறையாகப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'நாளையிலிருந்து ஊரடங்குன்னா என்னன்னு தெரியும்'... 'கடுமையான நடவடிக்கைகள்'... சென்னை காவல்துறை ஆணையர் அதிரடி!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை படு தீவிரமாகப் பரவி மக்களை பாடாய்ப்படுத்தி வருகிறது. அதிலும் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. ஊரடங்கில் காய்கறி கடைகள், அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

Stringent action against violators, Chennai City Police Commissior

ஆனால் பொதுமக்கள் பலர் ஊரடங்கு என்ற நினைப்பே இல்லாமல் அனாவசியமாக வெளியில் சுற்றி வருவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகக் காவல் ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், ''ஊரடங்கைக் கண்டு அச்சப்படும் வகையில் நாளை முதல் தீவிர நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

Stringent action against violators, Chennai City Police Commissior

குறிப்பாக 12 மணிக்கு மேல் கடைகள் திறந்திருந்தால் அந்த கடைகள் சீல் வைக்கப்படும் என ஆணையர் கூறியுள்ளார். மேலும் கண்காணிப்பைத் தீவிரப் படுத்த உத்தரவிட்ட ஆணையர், அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியில் வரக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். மேலும்  ஊரடங்கு முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை எனக் காவல் ஆணையர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்