‘டெப்போவுல நிறுத்தி வெச்சது குத்தமாயா?’.. ‘MTC பேருந்தையே ஆட்டையப் போடப் பார்த்த மர்ம நபர்!’.. சென்னை மாநகரில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பணிமனையில் நின்று கொண்டிருந்த சென்னை மாநகர பேருந்தை மர்ம நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அண்ணாநகர் பணிமனையில் மாநகரப் பேருந்து பணி முடிந்தபின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பணிமனையில் இப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகர பேருந்தை யாரோ முன்பின் தெரியாத மர்ம நபர் இயக்கி உள்ளது தெரியவந்தது.
மேலும் பேருந்தை இயக்கிச் சென்ற அந்த நபரை ஜிபிஎஸ் மூலம் போலீசார் டிராக் செய்தனர். பின்னர் சென்னை பாடி மேம்பாலம் அருகே அந்த பேருந்தை போலீசார் மீட்டனர். எனினும் இந்த பேருந்தை இயக்கிச்சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பணிமனையில் நின்று கொண்டிருந்த பேருந்து திடீரென இப்படி மர்ம நபர் ஒருவர் மூலம் மாயமாகியுள்ள சம்பவம் வழக்கத்துக்கு மாறான பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்