'லாக்டவுன் நேரத்துல மட்டும் இல்ல'... 'எப்பவும் குழந்தைகளுக்கு ஹெல்ப் பண்ணும்'... பல கதைகளுடன் மாஸ் காட்டும் சேனல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம் கொரோனா ஊரடங்கு காலத்தில் பல பெற்றோர்களின் கவலை மற்றும் புலம்பல் என்பது அவர்களின் குழந்தைகளைக் குறித்துத் தான். அவர்கள் சொல்லும் பெரிய புகார் என்பது, 'என் பையன் எப்போ பாத்தாலும் மொபைல் யூஸ் பண்ணிட்டு இருக்கான், எப்போ பாத்தாலும் கேம் விளையாடிட்டு இருக்கான்' இது தான் பல தாய்மார்களின் தினசரி புலம்பலாக மாறிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தற்போது சூப்பர் ஐடியாவோடு ரவிசங்கர் பாலச்சந்திரன் என்பவர் வித்தியாசமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளார்.

கதை சொல்லும் ஆர்வத்தில் தனது ஐடி வேலையை உதறி விட்டு ஸ்டோரி டைம் என்ற யூடியூப் சேனலை ரவிசங்கர் ஆரம்பித்துள்ளார். இது குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் கதை சொல்லும் விதம் தான். யூடியூப்பில் இதுபோன்று அதிகமான சேனல் இருக்கே, அப்படி என்ன இதில் ஸ்பெஷல் இருக்கிறது என்ற உங்களின் 'மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. அப்படி என்ன இல்லை என்றே சொல்லலாம்.
குழந்தைகளுக்கு வேறுமனமே கதைகளை மட்டும் சொல்லாமல், அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான நேர்மறையான சிந்தனைகள், அறம் குறித்த சிந்தனை, சுய ஒழுக்கம் எனப் பல பாசிட்டிவ்வான எண்ணங்களை கதைகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இது குழந்தைகளை நன்னெறி படுத்த உதவுவதோடு, அவர்கள் எந்த விதமான தவறான எண்ணங்களுக்கும் தங்கள் மனதை அலைப்பாய விடாமல் தடுக்கிறது. எனவே குழந்தைகள் நிச்சயம் கேம், திரைப்படங்கள் போன்றவற்றிலிருந்து விலகி நேர்மாறான எண்ணங்களின் தங்களது மனதை நிச்சயம் செலுத்த முடியும்.
ஸ்டோரி டைம் யூடியூப் சேனலில் அனைத்து வயதில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்ப கதைகள் இதில் அடங்கியுள்ளது. குறிப்பாக 2 முதல் 5 வயது, 6 முதல் 9 வயது, 10 முதல் 13 வயது என வித்தியாசமான கதைக் களங்கள் இங்கு உண்டு. அதிலும் குறிப்பாகக் குழந்தைகளுக்குப் பிடித்த விலங்கு கதைகள், வரலாற்றுத் தொடர்பான கதைகள், சாகசம் தொடர்பான கதைகள் எனக் கதைக்கு இங்குப் பஞ்சமில்லை. அப்புறம் என்ன ஊரடங்கு முடிஞ்சும் குழந்தைகளுக்கு ஸ்டோரி டைம் யூடியூப் சேனல் உபயோகமா தானே இருக்கும்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS