'பேச முடியாததால தவித்த நண்பன்'.. 'சைலண்ட்டா கேபிளை கட் பண்ணிய ஊழியர்கள்'.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை முகலிவாக்கம் பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டும் செந்திலின் மகன் தீனா, நேற்று முன்தினம் தனது வாய் பேசவியலாத மாற்றுத் திறனாளி நண்பனுடன், இரவு 9.40 மணி அளவில், முகலிவாக்கம் தனம் நகர் அருகே பைக்கை தள்ளிக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தூக்கி வீசப்பட்டார்.
இதனால் செய்வதறியாது திணறிய மாற்றுத்திறனாளி நண்பர் தனது வீட்டிற்கே சென்று விஷயத்தைச் சொல்லி அனைவரையும் சம்பவ இடத்துக்கு அழைத்து வந்துள்ளார். இறுதியாக இதற்குக் காரணமாக இருந்த மின்சார கேபிள் அங்கு அறுந்து விழுந்திருந்ததை கவனித்த மக்கள், ஆலந்தூர் மண்டல மின்வாரியத்திடமும், அப்பகுதி போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
ஆனால் மின்சார கேபிள் எல்லாம் கட்-ஆகவில்லை; அப்படியே ஆகியிருந்தாலும் அதில் கரண்ட் இல்லை என்று மின்வாரிய என்ஜினியர்கள் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து, தீனாவின் உடலை எடுத்துக்கொண்டு அம்மக்கள், முகலிவாக்கம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதன் பின் அங்கு விரைந்த போலீஸார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினர்.
எனினும் இதனிடையே இவ்விவகாரத்தை விசாரித்த பாஜக இளைஞரணி செயலாளரும் மத்திய வழக்கறிஞருமான அருள், சிசிடிவி காட்சிகளை ஆராயச் சொன்னபோதுதான், மின்சார கேபிள் பட்டு சிறுவன் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது. அப்போதும் கூட, மின்வாரியத்தின் பொறியியலாளர்கள், ‘வேண்டுமானால் கேபிளைத் தொட்டு பாருங்கள், கரண்ட் வருதா? இல்லையே?’ என்று அருளிடம் காண்பித்துள்ளனர். ஆனால் கேபிளின் கரண்ட்டினை அதன் பின்னர் மின்வாரிய ஊழியர்கள் கட் செய்வதும் சிசிடிவியில் சிக்கியது.
இதனை அடுத்து ஆலந்தூர் 12 வது மண்டல மின்வாரிய உதவி இன்ஜினீயர் செந்தில், உதவி செயற்பொறியாளர் பாலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு தீனாவின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர்.