"கெஞ்சுனேன்.. கதறி அழுதேன்!".. குரூர மனநிலைக்கு போன சதீஷ்..? மாணவி கொலை விசாரணையில் பகீர் தகவல்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தோழிகளுடன் நின்றுக் கொண்டிருந்தார் மாணவி சத்யஸ்ரீ.
அவரை சதீஷ் என்கிற இளைஞர் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் ரயிலில் சிக்கி மாணவி சத்யஸ்ரீ, உடல் நசுங்கியதால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார். இது தொடர்பான பரபரப்பு தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொற்றிக் கொண்டது.
மாணவி சத்யஸ்ரீயை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த, சதீஷ், தனது காதலை சத்யஸ்ரீ ஏற்றுக் கொள்ளாத காரணத்தால், ஆந்திரத்தில் அவரை ரயில் முன் தள்ளிவிட்டு கொன்றுவிட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனிடையே மாணவி சத்யஸ்ரீயின் குடும்பத்தில் மாணவி சத்யஸ்ரீயின் மரணத்தை தாள முடியாத சோகத்தில் இருந்த நிலையில், மாணவி உயிரிழந்த செய்தியை கேள்விப்பட்ட அவரது தந்தை மாணிக்கம் உயிரிழந்துள்ள சம்பவமும் பேரதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் அடுத்தடுத்து ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து மாணவி சத்யஸ்ரீரியை ரயில் முன் தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் சதீஷ் தப்பியோடியதாக கூறப்பட்டதை அடுத்து, இளைஞர் சதீஷை துரைப்பாக்கத்தில் தனிப்படை அமைத்து தேடிய போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சதீஷ் முதலில் சைதாப்பேட்டை குற்றவியர் நீதிமன்றத்தில் போலீசாரால் ஒப்படைக்கப்பட, பின்னர் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தொடர்ந்து மாணவி சத்யஸ்ரீ கொலை வழக்கை பதிவு செய்து, இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான், டிஜிபி சைலேந்திரபாபு இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது, "ஒரு தலைக் காதலால் மாணவி சத்யஸ்ரீயிடம் என் காதலை ஏற்கசொல்லி கெஞ்சுனேன்.. கதறுனேன்.. அழுதேன்!" என சதீஷ் வாக்குமூலம் கொடுத்ததாகவும், பின்னர் சைக்கோவாக மாறிய சதிஷ் , மாணவி சத்யஸ்ரீயை ரயிலில் தள்ளிவிட்டு கொன்றுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விசாரணை விடிய விடிய நடந்ததாகவும், அதில்தான் இளைஞர் சதீஷ், இப்படியான பகீர் வாக்குமூலத்தை தந்துள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
மற்ற செய்திகள்