‘அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு’... ‘கொரோனா பரவலில்’... ‘இந்தியா எந்த கட்டத்தில் உள்ளது?’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பரவலில் இந்தியா 2-ம் கட்டத்தில் தான் உள்ளது, என்றாலும் 3-ம் கட்டத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.
கொரோனா பரவும் விதத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நான்கு கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது.
முதல் கட்டம் (Imported cases ) : அதாவது கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோருக்கு கொரோனோ வைரஸ் தொற்று கண்டறியப்படுவது முதல் கட்டமாக அறியப்படுகிறது.
இரண்டாம் கட்டம் (Local transmission ) : உள்நாட்டு பரவல் எனப்படுகிறது. வெளியில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவுவது இரண்டாம் கட்டமாக பார்க்கப்படுகிறது.
மூன்றாம் கட்டம் (Community transmission) : உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவுவது மூன்றாம் கட்டமாக அறியப்படுகிறது.
நான்காம் கட்டம் (Epidemic): எங்கு எவர் மூலமகப் பரவியது என அறிய முடியாத அளவிற்கு உள்நாட்டிற்குள் அதீத அளவில் தீவிரமாகப் பரவுவது கொரோனா பரவலின் அபாய கட்டமான நான்காவது கட்டமாகும்.
இதில் சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் நான்காம் கட்டத்தில் உள்ளன. அங்கு தொற்றுநோய் பரவல் ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டிருக்கிறது. கொரோனா பரவலில் இந்தியா தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வந்த நபர்களுக்குத் தான் பெரும்பாலும் கொரோனா தொற்று பாஸிட்டிவ் என வந்துள்ளது. அவர்களின் மூலமாக ஒரு சில உள்ளூர் மக்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம் தான்.
இது மேலும் பரவி சமூக பரவலாக அதிகரித்தால் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகலாம். உள்ளூர் மக்கள் மூலமாக நோய் தொற்று சமூக பரவலாக அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காகவே, அரசு 21 நாள் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீடுகளுக்குள் முடங்கியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கப்படுகின்ற இந்த வேளையில், முன்னெச்சரிக்கையாக எது நடந்தாலும் தயாராக இருக்கும் வகையில் 3-ம் கட்ட நடவடிக்கைக்கு தயார்படுத்தி வருகிறது இந்தியா. இந்தியாவில் முதல் மாநிலமாக டெல்லியில் ஏற்கனவே 3-ம் கட்ட நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. மாநில அரசு அமைத்த 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவின் அறிக்கைப்படி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது கெஜ்ரிவால் அரசு. "தற்போது, விஷயங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஆனால் பாதிப்பின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து நாம் நினைத்ததைவிட கூடிவிட்டால் எல்லாம் கையைவிட்டு போனதுபோல் ஆகிவிடும். அதனால்தான் எல்லா ஏற்பாடுகளுடனும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும். 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு - கொரோனா வைரஸ் பரவலின் 3 ஆம் கட்டத்திற்குள் நகரம் நுழைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
I have recd the report from the panel of doctors headed by Dr Sareen recommending measures to prepare for a potential Stage 3 outbreak of Covid-19 in Delhi
We are ramping up our capacity for an eventuality of 1,000 daily positive cases, for testing, treatment and isolation.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 27, 2020