100% இயற்கையான 'ஹலோ' இளநீர்...! 'சென்னையின் அனைத்து முக்கிய இடங்களிலும்...' 'எளிதில் வாங்கும் வகையில் விற்பனை இயந்திரங்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையை சேர்ந்த வேளாண் உற்பத்தி நிறுவனமான சௌக்கியா ஆக்ரோ (Sowkea Agro) நவீன முறையில் 'ஹலோ' இளநீர் (Halo Elaneer) என்னும் புதிய படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

100% இயற்கையான 'ஹலோ' இளநீர்...! 'சென்னையின் அனைத்து முக்கிய இடங்களிலும்...' 'எளிதில் வாங்கும் வகையில் விற்பனை இயந்திரங்கள்...!

பொள்ளாச்சி தென்னந்தோப்புகளில் சிறந்த பராமரிப்பில் வளர்க்கப்படும் தென்னை மரங்களின் இளநீர்களில் இருந்து 'ஹலோ' இளநீர் உருவாக்கப்படுகிறது. இளநீரின் மேற்பகுதி நன்கு சீவப்பட்ட நிலையில் சுலபமாக உள்ளே இருக்கும் இளநீரை குடிக்கும் வகையில் இழுப்பு-வளையமும் பொருத்தப்பட்டுள்ளது.

100% இயற்கை மற்றும் சத்து பானமான இந்த 'ஹலோ' இளநீர் 5-15 டிகிரி குளிரில் வைக்கப்படுகிறது. மேலும் இளநீரானது சுமார் 12 நாட்கள் வரை உபயோகப்படுத்த முடியும். ஹலோ இளநீரின் உள்ளே இருக்கும் நீர் அளவின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது

மேலும் நுகர்வோரின் சுமையை குறைக்கும் வகையில், எவ்வித டீலர்களும் இல்லாது, நேரடியாக ஆர்டர்களை ஏற்க 'சௌக்கியா டோர்ஸ்டெப் டெய்லி' (Sowkea Doorstep Daily) என்ற மொபைல் ஆப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் பெறப்படும் ஆர்டர்களை, நேரடியாக நுகர்வோரின் இல்லத்திற்கே, மிக விரைவாக கொண்டு சென்று சேர்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியமான 'ஹலோ' இளநீர், OMR-ல் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட கடைகளிலும் கிடைக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஐ.டி பூங்காக்கள், உற்பத்தித் தொழில்கள், அரசு அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், மெட்ரோ நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்ஸ், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மேல்தட்டு உணவகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஜிம்கள், உடற்பயிற்சி ஸ்டுடியோக்கள் மற்றும் யோகா மையங்கள் ஆகிய இடங்களில் தொடுதிரை உடைய விற்பனை இயந்திரங்களை நிறுவி, அதன் மூலம் உடல்நலத்திற்கு ஆரோக்கியமான, இளநீரை வாடிக்கையாளர்கள் எளிதில் வாங்கும் வகையில் சௌக்கியா ஆக்ரோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

முன்னணி ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் மின்னணு நிறுவனங்களுக்கான கூறுகளை தயாரிக்கும், சுமார் 200 கோடிகளுக்கு மேல் விற்பனை ஈட்டும் விக்னேஷ் பாலிமர்ஸ் தான் சௌக்கியா ஆக்ரோ நிறுவனத்தையும் நடத்தி வருகிறது.

'ஹலோ இளநீர்' குறித்து கருத்து தெரிவிக்கும்போது, விக்னேஷ் பாலிமர்ஸ் & சௌக்கியா ஆக்ரோவின் நிர்வாக இயக்குனர் திரு. ஆர். பி. சிவகுமார், "இந்த இளநீர், அனைத்து வயதினருக்கும் நல்லது. இது சர்க்கரை ஏற்றப்பட்டு விற்கப்படும் மற்ற குளிர்பானங்களுக்கு நல்லதொரு மாற்றாகும். இது 100% இயற்கையானது. உடல் வெப்பத்தை குறைக்கிறது, உடலை மறுசீரமைக்கிறது... உடல் எடையை குறைக்கவும், சிறுநீரக கோளாறுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ’ஹலோ இளநீர்’ எப்பொழுதும், பெரியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஒரு ஆரோக்கியமான பானமாகும்,” என்றார்.

அதுமட்டுமில்லாமல், பொள்ளாச்சி தோப்புகளிலிருந்து, சரியான நேரத்தில் அறுவடை செய்து, சுகாதாரமான  இளநீரையே விற்பனை செய்கிறோம். மேலும் நவீன முறையில் மொபைல் பயன்பாடுகள், ஹைப்பர் லோக்கல் டெலிவரி மற்றும் ஐஓடி (IoT) அடிப்படையிலான விற்பனை இயந்திரங்கள் மூலம் திறமையான விநியோக வலையமைப்பை நாங்கள் உறுதிசெய்கிறோம்'.

விவசாயிகள் குறித்து கூறிய திரு. சிவகுமார், “நான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவன். விவசாயிகள் மீதும், அவர்களின் கடின உழைப்பின் மீதும் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. விவசாயிகளுக்கு தேவையான ஆதாரத்தையும், சில நேரங்களில் அவர்களுக்கு ஏற்படும் நியாயமான இழப்பீட்டையும் நாங்கள் வழங்குகிறோம். எங்கள் இரட்டை நோக்கங்கள் நுகர்வோருக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பானங்களை தேர்ந்தெடுப்பதை ஊக்குவிப்பதும், விவசாயிகளின் முயற்சிகளுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்வதுமாகும்' என கூறியுள்ளார்.

மேலும் சௌக்கியா ஆக்ரோ நிறுவனம் அரைத்த தேங்காய், சமையல் எண்ணெய்கள் மற்றும் தூய்மையான மாட்டு பால் ஆகியவற்றையும் விற்பனை செய்து வருகின்றனர்.

For more details contact:

R. B. Sivakumar, MD

Sowkea Agro And Retail Concepts Private Limited

9003072002 | md@sowkea.com

மற்ற செய்திகள்