"லவ் டுடே படத்துல வர்ற மாதிரி.. பிளாக்மெயில் நடந்தா"... இதை செய்யணும்.. மேடையை அதிர வைத்த செளமியா அன்புமணி!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாமக கட்சியின் தலைவராக இருப்பவர் அன்புமணி ராமதாஸ். இவரது மனைவி பெயர் சவுமியா ராமதாஸ். இவர் அரசியலில் அதிக ஈடுபாடுடன் இல்லை என்றாலும், பல்வேறு நல்ல காரியங்களிலும், விழிப்புணர்வு விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் சவுமியா ராமதாஸ்.

"லவ் டுடே படத்துல வர்ற மாதிரி.. பிளாக்மெயில் நடந்தா"... இதை செய்யணும்.. மேடையை அதிர வைத்த செளமியா அன்புமணி!!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரோஹித் ஷர்மாவிற்கு தொப்பியை கொடுத்ததும்.. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டிய பிரதமர் மோடி..

சமீபத்தில் சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த "பெண்களின் ஆரோக்கியம்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய விஷயங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

கர்ப்பிணி பெண்கள் மரணம் இந்திய அளவில் குறைந்து போனது பற்றி பேசி இருந்த சவுமியா அன்புமணி, கல்லூரி பெண்கள் மற்றும் இளம்பெண்களுக்கு சில விஷயங்களை அறிவுறுத்தி இருந்தார்.

Soumiya Anbumani speech about blackmail around women

Images are subject to © copyright to their respective owners.

பெண்கள் துணிவா இருக்கணும்..

"கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் உள்ளிட்டோர் பாலியல் துன்புறத்துலுக்கு ஆளாக நேரிடும் பட்சத்தில் உடனடியாக அது பற்றி தைரியாமாக புகார் செய்ய வேண்டும். பெண்கள் துணிவுடன் செயல்பட வேண்டும். அதே போல, அனைத்து பெண்களும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

10, 20 நாள்ல மறந்துருவாங்க..

எனக்கும் 3 பெண் குழந்தைகள் இருக்காங்க. நான் எந்த பெண்கள் கல்லூரி, பள்ளிகளுக்கு போய் பேசினாலும் தவறாமல் சொல்றது ஒரு விஷயம் தான், பிளாக் மெயில் விஷயத்துக்கு மட்டும் தயவு செய்து பயப்படாதீங்க. யாராவது உங்களுக்கு உடை இல்லாத போட்டோக்களையும் அல்லது உங்களை பற்றி அசிங்கமான விஷயத்தை வெளிப்படுத்தினாலும் பயப்படாதீங்க. லவ் டுடே படத்துல கூட காண்பிக்கிறாங்களே, ஃபேக் வீடியோ அது மாதிரி உங்களை பற்றி உண்மையாவே வந்தாலும் சரி பயப்படாதீங்க. சமூக வலைதளத்தில் இதெல்லாம் 10, 20 நாள் இருக்கும். அதுக்கப்புறம் வேற வீடியோ வந்துரும், இதெல்லாம் மறந்துடுவாங்க.

Soumiya Anbumani speech about blackmail around women

Images are subject to © copyright to their respective owners.

நீங்க எதுவா இருந்தாலும் அம்மா கிட்ட சொல்லுங்க உண்மையில் அதான் ரொம்ப நல்லது. அம்மா திட்டினாலும் வாங்கிக் கொள்ளுங்கள். யார்கிட்டயோ போய் வதைபடுவதை விட அம்மா கிட்ட திட்டு வாங்குறது தப்பே கிடையாது. தப்பே நடந்து விட்டது, இல்ல தவறாக உங்களை சித்தரித்து விட்டார்கள் என்றாலும் கூட பயப்படாதீங்க.

மனநலனுக்கு மிகவும் முக்கியம்..

இதேபோல நிறைய பிரச்சனைகளில் பெண்கள் மாட்டிக் கொள்கிறார்கள். போன் கையில் வைத்துக் கொண்டால் கூட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களைச் சுற்றி நடப்பதை கொஞ்சம் கவனித்துக் கொண்டே இருங்கள். அது உங்கள் மனநலனுக்கு மிகவும் முக்கியம். பெண்கள் நன்றாக இருந்தால் தான் அந்த குடும்பமே நன்றாக இருக்கும்.

பாலியல் வன்கொடுமை உட்பட்ட தொந்தரவுகளால் மனநல பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்புகளை கண்டுபிடிக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உடன் பிறந்தவர்கள், சுகாதாரத்துறை, காவல்துறை என இவர்களுக்கு எல்லாம் பயிற்சி ஏற்படுத்தப்பட வேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தைகளை முதலில் அடையாளம் காண வேண்டும். அப்படி அடையாளம் கண்டு கொண்டால் தான் அவர்களுக்கு உடல் ரீதியான உடனடி பாதுகாப்பு அல்லது மனரீதியான பாதுகாப்பான நம்மால் அளிக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.

Also Read | மகளிர் தினத்தில் பிறந்த மகள்.. மீண்டும் தந்தையான உமேஷ் யாதவ்.. வாழ்த்தும் ரசிகர்கள்!!

SOUMIYA ANBUMANI, SOUMIYA ANBUMANI SPEECH, BLACKMAIL, WOMEN

மற்ற செய்திகள்