அப்பாவின் சடலத்திற்கு முன் திருமணம் செய்துகொண்ட மகன்.. கடைசி ஆசையை நிறைவேற்ற திரண்டு வந்த ஊர் மக்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி அருகே தனது தந்தையின் சடலத்துக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார் மகன் ஒருவர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | சென்னையில மேட்ச்.. Fans-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்ரோ நிர்வாகம்.. போடு வெடிய..!
திருமணம்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு வயது 70. இவருடைய மனைவி அய்யம்மாள் அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவர்களுக்கு பிரவீன் குமார் என்ற மகன் இருக்கிறார். பட்டப்படிப்பை முடித்த பிரவீன் தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, தனது மகனுக்கு திருமணம் செய்துவைக்க விரும்பியிருக்கின்றனர் ராஜேந்திரன் - அய்யம்மாள் தம்பதி.
இதனை தொடர்ந்து உறவினர் மகளான சொர்ணமால்யா என்பவரை பிரவீன் குமாருக்கு பெண் பார்த்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் வரும் 27 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இருதரப்பிலும் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்திருக்கின்றன. திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் வந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் திடீரென ராஜேந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்திருக்கின்றனர். இருப்பினும் மருத்துவமனையில் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனால் அவரது உறவினர்கள் பேரதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இதனையடுத்து அவருடைய உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
நெகிழ்ச்சி
அப்போது தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்திருக்கிறார் பிரவீன். இதனையடுத்து, பெண் வீட்டாருக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
அவர்களும் ஒப்புக்கொள்ளவே, ராஜேந்திரனின் உடலுக்கு முன்பே பிரவீன் - சொர்ணமால்யா திருமணம் எளிதான முறையில் நடைபெற்றிருக்கிறது. இதில் ஊர் மக்கள் திரளாக கலந்துகொண்டிருக்கின்றனர். அதன் பிறகு, ராஜேந்திரனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மற்ற செய்திகள்