'திருநங்கை'யாக மாறிய 'மகன்'.. எச்சரித்த 'தாய்'... சொன்ன 'சொல்' கேட்காததால் நேர்ந்த 'கொடூரம்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் மாவட்டம் ஜாகீர்அம்மபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி. கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு ஒரே ஒரு மகன் உள்ளார்.

'திருநங்கை'யாக மாறிய 'மகன்'.. எச்சரித்த 'தாய்'... சொன்ன 'சொல்' கேட்காததால் நேர்ந்த 'கொடூரம்'!!

பத்தாம் வகுப்பு வரை  படித்துள்ள இவர், அதன் பிறகு படிப்பை நிறுத்தி விட்டு, சிறு சிறு வேலைகளைச் செய்து வந்துள்ளார். அப்படி இருந்து வந்த வேளையில், தனது உடலில் பாலின ரீதியாக சில மாற்றங்களை உணர்ந்துள்ளார். இதன் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தனது தாய் உமாதேவியின் உடைகளை எடுத்து அணிந்து கொள்வதும், பெண் செய்து கொள்ளும் உடல் பாவனைகள் உள்ளிட்டவற்றை செய்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

Son become transgender mother killed him cruely

இந்த தகவல்,உமாதேவிக்கு தெரிய வரவே அதிர்ச்சியில்  உறைந்து போயுள்ளார் அவர். தனது மகனின் மாற்றத்தைக்  கண்டித்துள்ள உமாதேவி, ஒரு ஆண் போல தான் நீ நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். தன்னிடம் ஏற்பட்ட மாற்றத்தை தாய் கண்டித்ததால், மனமுடைந்த இளைஞர், யாரிடமும் இது பற்றி தெரிவிக்க முடியாமல், வீட்டை விட்டுக் கிளம்பி பெங்களூர் சென்றுள்ளார்.

அதன் பிறகு, ஒரு மாதம் கழித்து திரும்பி வந்த இளைஞர், அறுவை சிகிச்சை எதுவும் செய்து கொள்ளாமல், உடை, சிகை அலங்காரம் என அனைத்திலும் தன்னை ஒரு பெண் போல அலங்கரித்து வந்துள்ளார். இதனைக் கண்ட உமாதேவி, மேலும் அதிர்ச்சியில் உறைந்து போனதாக கூறப்படுகிறது. மகனின் நிலையை அவர் ஏற்றுக் கொள்ளாத நிலையில், பெங்களூரில் உள்ள சக திருநங்கைகளுடன் தான் இணைந்து வாழப் போகிறேன் என அங்கிருந்து அவர் மீண்டும் கிளம்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, தனது மகன் காணவில்லை என போலீசாரிடம் உமாதேவி புகாரளித்த நிலையில், அவரை போலீசார் மீட்டுக் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, நீதிமன்ற விசாரணையில், அவர் மேஜர் என்பதால், அவருக்கு விருப்பப்படியே அவரது வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது.

Son become transgender mother killed him cruely

இந்நிலையில்,பெங்களூரில் இருந்த அவர், தனது தாயுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம் என விரும்பி சொந்த ஊர் வந்துள்ளார். அப்போது அந்த இளைஞரை பார்த்து அக்கம்பக்கத்தினர் கேலி செய்துள்ளனர். இதனால், உமாதேவி அதிகமாக வருந்தி போயுள்ளார். தொடர்ந்து, இது பற்றி தான் வேலை பார்க்கும் ஹோட்டல் உரியமையாளரிடம் சொல்லி யோசனை கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஹோட்டல் உரிமையாளரோ, உன் மகனை கை, கால் உடைத்து வீட்டில் உட்கார வைத்துக் கொள். எல்லாம் சரியாகும் என கூறியுள்ளார். அதன் பேரில், ஆட்களை வைத்து தனது மகனை அடிக்கத் துணிந்துள்ளார் உமாதேவி. இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, இளைஞரை கம்பி போன்ற ஆயுதம் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளது.

இதில், பலத்த காயமடைந்த இளைஞரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.,ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். முதலில், தனது மகன் பைக்கில் இருந்து விழுந்ததாவும், அதன் பிறகு மாடியில் இருந்து விழுந்ததாகவும், முன்னுக்கு பின் முரணான பதில்களை உமாதேவி தெரிவித்துள்ளார். இதனால், அவர் மீது சந்தேகம் வலுக்கவே, நடந்த உண்மையை அவரை ஒப்புக்.கொண்டார். ஊரார் கேலி செய்ததால், கோபத்தில் ஆட்களை வைத்து மகனை அடிக்கச் சொன்னதாகவும், அதில் அவன் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டதாகவும் உமாதேவி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, உமாதேவியை கைது செய்த போலீசார், இதற்கு திட்டம் சொன்ன ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். ஹார்மோன் மாற்றங்கள் பொறுத்து உடலில் நிகழும் இது போன்ற மாற்றத்தை புரிந்து கொண்டு, அவர்களை அரவணைத்து, இதுகுறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.

TRANSGENDER, திருநங்கை

மற்ற செய்திகள்