VIDEO: பூனையை முழுசாக விழுங்கிய ‘கருநாகம்’.. கோவையில் நடந்த அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் கருநாகம் ஒன்று பூனையை விழுங்கி கக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

VIDEO: பூனையை முழுசாக விழுங்கிய ‘கருநாகம்’.. கோவையில் நடந்த அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!

கோவை காந்தி பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சுமார் 6 அடி நீளமுள்ள கருநாகம் கிடப்பதை குடியிருப்பு வாசிகள் பார்த்துள்ளனர். மேலும் அந்த நாகம் அங்கிருந்து நகர முடியாமல் தவித்துள்ளது. இதனால் பாம்பு பிடிக்கும் வல்லுனரான ‘ஸ்னேக்’ சஞ்சய் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த அவர் பாம்பை லாவமாக வெளியே கொண்டு வந்துள்ளார்.

அப்போது கருநாகம் எதையோ விழுங்கி நகர முடியாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சிறிதுநேரம் அதன்போக்கிலேயே சஞ்சய் விட்டுள்ளார். சற்று நேரத்தில் சுமார் இரண்டரை அடி நீளமுள்ள பூனை ஒன்றை கருநாகம் கக்கி உள்ளது. இதனைப் பார்த்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்து, இந்த பூனை தங்கள் குடியிருப்பை சுற்றி வரும் என கூறியுள்ளனர்.

கருநாகம் பொதுவாக எலி, தவளை போன்றவற்றைதான் உண்ணும் என்றும், பூனையை உண்பது அபூர்வமான ஒன்று எனக் கூறப்படுகிறது. இதனை அடுத்து கருநாகம் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் பூனை விழுங்கி நகரமுடியாமல் கிடந்த கருநாகத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

COIMBATORE, SNAKE, CAT, VIRAL