ஆத்தீ..! இது உள்ள இருக்குறது தெரியாமயா வண்டி ஓட்டிட்டு வந்தீங்க.. ஆசிரியருக்கு ‘ஷாக்’ கொடுத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இருசக்கர வாகனத்துக்குள் விஷமுள்ள நாகபாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் துரை அரசன். இவர் வஞ்சிபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். துரை அரசன், தினமும் அவிநாசியில் இருந்து பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அவர் வழக்கம் போல வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்ல தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் பள்ளியில் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் இருந்து எதோ என சத்தம் வந்துள்ளது. டயர் ஏதும் பஞ்சர் ஆகிவிட்டதா என பார்த்துள்ளார். ஆனால் வாகனத்தின் இரு டயர்கள் நல்ல நிலையில் தான் இருந்துள்ளது.
இதனை அடுத்து உற்று கவனித்தபோது தான், வாகனத்தின் விளக்கு அமைந்துள்ள வைசர் பகுதியில் விஷமுள்ள நாகப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவிநாசியை சேர்ந்த விஜி என்ற பாம்பு பிடி நபரை அழைத்துள்ளனர்.
சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின் சுமார் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. அதன்பின் பத்திரமாக அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பாம்பு விடப்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்