என்னங்க அது...? 'பைக்குள்ள என்னமோ நெளியுது...' 'ஒவ்வொண்ணும் வெயிட் 4½ கிலோ...' - அதிர வைக்கும் 'பகீர்' பின்னணி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கீரனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் (12-06-2021) இரவு வெண்ணந்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

என்னங்க அது...? 'பைக்குள்ள என்னமோ நெளியுது...' 'ஒவ்வொண்ணும் வெயிட் 4½ கிலோ...' - அதிர வைக்கும் 'பகீர்' பின்னணி...!

அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்றை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

காரில் இருந்த மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளிக்கவே போலீசாருக்கு சந்தேகம் வந்தது. உடனடியாக காரை சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த காகித பைகளில் ஏதோ ஒன்று நெளிவது போல் இருந்துள்ளது. திறந்து பார்த்தபோது இரண்டு மண்ணுளி பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கார் டிரைவர் வேல்முருகன் (49), வில்பிரின் (36), ஆல்பின் (48) ஆகிய மூன்று பேரையும் போலீசார் ராசிபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கார் மற்றும் மண்ணுளி பாம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட மூன்று பேரிடம் ராசிபுரம் வனத்துறை அலுவலகத்தில் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், ராசிபுரம் வனச்சரகர் ரவிச்சந்திரன் மற்றும் வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

முதல்கட்ட விசாரணையில் பிடிபட்ட மூன்று பேரும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் வேலூரில் இருந்து தலா 4½ கிலோ எடை கொண்ட 2 மண்ணுளி பாம்புகளை அதிக விலைக்கு விற்க கன்னியாகுமரிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மூன்று பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மண்ணுளி பாம்பை யாரிடம் விற்கப் போகிறார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

மற்ற செய்திகள்