குளிர்காலம் முடியும் வரை பைக்கை கொஞ்சம் ‘செக்’ பண்ணியே எடுங்க.. ‘ஷாக்’ கொடுத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பைக் சீட்டுக்கு அடியில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் முள்ளோடை கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான ராஜு. இவர் நேற்று வெளியே செல்வதற்காக தனது பைக்கை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது பைக்கின் சீட்டுக்கு அடியில் இருந்து ஏதோ சத்தம் வந்துகொண்டே இருந்துள்ளது.
இதனை அடுத்து சத்தம் வந்த இடத்தை பார்த்தபோது சீட்டுக்கு அடியில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதைப் பார்த்து ராஜு அதிர்ச்சியடைந்த அவர், உடனே பாம்பு ஆர்வலர் செல்லா என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த செல்லா பைக்கில் இருந்த பாம்பை பிடிக்க முயற்சி செய்தார்.
அப்போது ஆக்ரோஷமான பாம்பு, படமெடுத்து அவரை கொத்த சீறியது. ஆனாலும் லாவகமாக பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் சென்று விட்டார். பைக் சீட்டுக்கு அடியில் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் கடந்த ஆண்டு டீ குடிப்பதற்காக நபர் ஒருவர் அதிகாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சீட்டுக்கு அடியில் இருந்த விஷப்பாம்பு ஒன்று அவரது காலில் கொத்தியது. இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட அவர் வேகமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது குளிர்காலம் என்பதால் பைக், கார் போன்ற வாகனங்களில் விஷப்பூச்சிகள் தங்கி இருக்க வாய்ப்புள்ளது. அதனால் வாகனங்களை எடுக்கும் முன் நன்றாக சோதனை செய்துவிட்டு எடுக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
என் ஷிப்டி முடிஞ்சிருச்சு.. திடீரென பாதி வழியில் விமானத்தை ஓட்ட மறுத்த பைலட்.. பரபரப்பு சம்பவம்..!
மற்ற செய்திகள்