'காலியாகும் எம்.பி. பதவிகள்'... 'அடுத்ததாக ராஜ்ய சபாவில்'... 'ஒலிக்கப் போகும் 6 தமிழக குரல்கள்'... 'போட்டியே இல்லாமல் யார் யார் தேர்வு?'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 6 மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

'காலியாகும் எம்.பி. பதவிகள்'... 'அடுத்ததாக ராஜ்ய சபாவில்'... 'ஒலிக்கப் போகும் 6 தமிழக குரல்கள்'... 'போட்டியே இல்லாமல் யார் யார் தேர்வு?'!

தமிழகத்திலிருந்து கடந்த 2014-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடுத்த மாதம் 2-ம் தேதியுடன் நிறைவடைகின்றன. இதையடுத்து, அந்த இடங்களை நிரப்புவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ந் தேதி தொடங்கி, 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

அதிமுக சார்பில்  கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியிட்டனர். அதேபோல் திமுக சார்பில், அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, திருச்சி சிவா ஆகியோர் போட்டியிட்டனர். 3 சுயேட்சைகளும் போட்டியிட்டனர். 3 சுயேச்சை வேட்பாளர்களுக்கு எம்எல்ஏக்கள் யாரும் முன்மொழியாததால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதனால், திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் 6 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். போட்டியின்றி தேர்வாகியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளதால், வருகிற 26-ம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை எம்பிக்கான தேர்தல் நடைபெறாது.

DMK, AIADMK, VOICE, RAJYA SABHA, CONTEST, ELECTION