IPL மேட்சை இலவசமாக பார்க்க App.. சிக்கிய சிவகங்கை இளைஞர்.. அதிர வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இலவசமாக பார்க்க தனியாக செயலி ஒன்றை இளைஞர் உருவாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IPL மேட்சை இலவசமாக பார்க்க App.. சிக்கிய சிவகங்கை இளைஞர்.. அதிர வைத்த சம்பவம்..!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 31 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன.

ஐபிஎல் தொடரை டிவியில் ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 16,347 கோடிக்கு வாங்கியுள்ளது. 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டிவியில் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டை கட்டணம் இல்லாமல் இலவசமாக பார்க்க தனியாக செயலி ஒன்றை இளைஞர் ஒருவர் உருவாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி நிர்வாகியான ஹைதராபாத்தைச் சேர்ந்த கடாரம் துப்பா என்பவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் ரவீந்தர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்த மோசடியில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 29) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இவர் டிவியில் ஒளிபரப்பாகும் ஐபிஎல் தொடரை கட்டணமில்லாமல் பார்ப்பதற்காக தனியாக செயலி ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளார். மேலும் அதில் சில நிறுவனங்களின் விளம்பரங்களும் ஒளிபரப்பானதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ராமமூர்த்தியை கைது செய்த போலீசார், சிவகங்கை முதலாம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஹைதராபாத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரில் காண தனியாக செயலியை உருவாக்கிய சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IPL, SIVAGANGAI, APP

மற்ற செய்திகள்