11 வருஷமா ஆசையா வளர்த்த செல்ல நாய்.. பிரிவு தாங்காமல் முதியவர் செய்த நெகிழ்ச்சி காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை அருகே தான் ஆசையாய் வளர்த்து வந்த நாய்க்கு சிலை செய்து அதற்கு பூஜை செய்து வருகிறார் முதியவர் ஒருவர். இது அந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கா..? இவ்வளவு நாளா இதுதெரியாம போச்சே..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது பிரமாண குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பாக நாய் குட்டி ஒன்றினை வளர்க்கத் துவங்கி இருக்கிறார். ஷாம்குமார் என பெயரிடப்பட்ட அந்த நாய் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டது.
தனது வீட்டின் ஒரு பகுதியில் தன்னுடைய வளர்ப்பு நாயை முத்து புதைத்து இருக்கிறார். தான் ஆசையாய் வளர்த்து வந்த ஷாம்குமாரின் பிரிவினை தாங்க முடியாமல் முத்து சோகத்தில் இருந்துள்ளார்.
நாய்க்கு கோவில்
இதனிடையே தன்னுடைய ஆசைக்கும் அன்புக்கும் பாத்திரமாக விளங்கிய நாய்க்கு கோவில் கட்ட முடிவெடுத்துள்ளார் முத்து. ஆனால் தன்னுடைய வீட்டின் அருகே இடப் பற்றாக்குறை இருந்ததால் வேறு இடத்தில் கோவில் கட்டும் பணிகளை தொடங்கி இருக்கிறார். தன்னுடைய நாய் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பிடி மணல் எடுத்து மகாபலிபுரத்தில் அதிக விலை கொடுத்து தத்ரூபமாக தனது ஷாம்குமாரை சிற்பமாக கொண்டு வந்திருக்கிறார் முத்து.
பூஜை
தற்போது முத்துவிற்கு 80 வயதாகிறது. ஆனாலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஷாம்குமாரின் சிலைக்கு பூஜை செய்து வணங்கி வருகிறார் இவர். பிரதான சாலைக்கு அருகாமையில் உள்ளதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சிலையை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு சிலை வைத்து பூஜை செய்து வரும் முத்துவை அந்த கிராம மக்கள் பாராட்டி உள்ளனர்.
உறவினர்களே இந்த காலத்தில் எளிதில் பிரிந்து சென்றுவிடும் நிலையில், தான் ஆசையாக வளர்த்து வந்த செல்ல நாய்க்கு முதியவர் ஒருவர் சிலை செய்து அதனை வணங்கிவருவது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்து உள்ளது.
மற்ற செய்திகள்