"இவ்ளோ நேரமா என்ன பண்றாங்க??".. பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியை.. வீட்டுக்கு போய் பார்த்ததும் உறைந்து நின்ற ஆசிரியர்கள்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீண்ட நேரமாகியும் தலைமை ஆசிரியை பள்ளிக்கு வராத காரணத்தினால், அவரது வீட்டிற்கு சென்று பார்த்த ஆசிரியைகளுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

"இவ்ளோ நேரமா என்ன பண்றாங்க??".. பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியை.. வீட்டுக்கு போய் பார்த்ததும் உறைந்து நின்ற ஆசிரியர்கள்.!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள தங்கமணி திரை அரங்கு அருகே வசித்து வருபவர் ரஞ்சிதம். தெம்மாப்பட்டு பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் ரஞ்சிதம் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரது கணவர் பெயர் ராஜேந்திரன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், ரஞ்சிதத்தின் மகள் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், அவரின் மகன் கோவை மருத்துவ கல்லூரியில் தங்கி படித்து வருவதாகவும் தெரிகிறது. இதனால், தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் ரஞ்சிதம்.

தலைமை ஆசிரியை என்பதால், பள்ளியில் உள்ள சாவிகள் அனைத்தும் ரஞ்சிதத்திடம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில், தலைமை ஆசிரியையான ரஞ்சிதம் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. பள்ளிக்கு வராத அவரை தொடர்பு கொள்ள பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் சிலரும் மொபைல் போனில் அழைத்துள்ளனர்.

ஆனால், பல முறை முயற்சித்தும் ரஞ்சிதம் போனை எடுக்கவில்லை. இதனால், பள்ளியில் காத்திருந்த ஆசிரியர்கள் நேரடியாக ரஞ்சிதம் வீட்டிற்கும் வந்து பார்த்துள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.

ஆசிரியைகள் அங்கே வந்த போது, ரஞ்சிதம் வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு கிடந்துள்ளது. இதனையடுத்து வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், உள்ளே சென்று பார்த்த போது, ரஞ்சிதம் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டதும் ஆசிரியைகள் பதறியடிக்கவே, உடனடியாக போலீசாருக்கும் இது பற்றி தகவல் கொடுத்துள்ளனர்.

அடுத்த கொஞ்ச நேரத்தில், சம்பவ இடம் வந்த போலீசார், ரஞ்சிதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி நடந்த முதற்கட்ட விசாரணையில், ரஞ்சிதம் கழுத்தில் கிடந்த நகை மற்றும் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

தலைமை ஆசிரியை தனது வீட்டில் உயிரிழந்து கிடந்த சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

HEAD MISTRESS, SIVAGANGAI, CCTV

மற்ற செய்திகள்