குடிநீர் குழாய்க்காக லஞ்சம் கேட்ட பஞ்சாயத்து தலைவி.. 20 வருஷம் கழிச்சு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள ஆலங்குடி பஞ்சாயத்தில் வசித்து வந்தவர் கணபதி. கடந்த 2002 ஆம் ஆண்டு, புதிய குடிநீர் இணைப்புக்காக ஆலங்குடி பஞ்சாயத்தில் விண்ணப்பித்திருந்தார்.

குடிநீர் குழாய்க்காக லஞ்சம் கேட்ட பஞ்சாயத்து தலைவி.. 20 வருஷம் கழிச்சு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Also Read | நம்ம எல்லாம் மிடில் கிளாஸ்".. 90-ஸ் கிட்ஸ்களின் ஜாலியான அனுபவங்களை புட்டுப்புட்டு வைத்த இளம்பெண்.. IAS அதிகாரி பகிர்ந்த சூப்பர் வீடியோ..!

அந்த சமயத்தில் ஆலங்குடி பஞ்சாயத்து தலைவியாக இருந்த ராணி ஆரோன் என்பவரையும் கணபதி அணுகி உள்ளார்.

மேலும் குடிநீர் இணைப்பு வழங்க தனக்கு லஞ்சமாக 300 ரூபாயை ராணி ஆரோன் கேட்டுள்ளார். குடிநீர் இணைப்பு பெற லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கணபதி, சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் ஆலங்குடி பஞ்சாயத்து தலைவி ராணி ஆரோன் மீது புகார் கொடுத்துள்ளார்.

இதன் பேரில் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் ராணி ஆரோனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்துள்ளனர். அதன் படி, கணபதியிடம் இருந்த லஞ்ச பணமான 3000 ரூபாயை பெறும் போது ராணி ஆரோனை கைது செய்தனர். இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கும் நடைபெற்று வந்தது.

sivagangai 300 bribe for drinking water connection court order

இந்த நிலையில், லஞ்ச வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரான ராணி ஆரோனுக்கு லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக 3 வருடங்கள் சாதாரண சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், புகார்தாரரிடமிருந்து லஞ்ச பணம் பெற்றதற்கு 4 வருடங்கள் சாதாரண சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் மேலும் நான்காண்டு சிறை தண்டனையும், அபதாரம் ஐந்தாயிரம் ரூபாயும் விதித்தும் இந்த 11 ஆண்டு சிறை தண்டனை 4 ஆண்டுகள் ஏக காலத்தில் அனுபவித்து முடிக்கவும் 15 ஆயிரம் ரூபாய் அபதார தொகையை உடனடியாக செலுத்தவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

sivagangai 300 bribe for drinking water connection court order

அதே வேளையில், இந்த வழக்கில் புகார்தராரான கணபதி மற்றும் சாட்சி கூறிய ராமசாமி ஆகிய 2 பேரும் விசாரணையின் போது பிறழ் சாட்சிகளாக மாறினர். அவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 300 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 15,000 ரூபாய் அபராதமும் பஞ்சாயத்து தலைவி ராணி ஆரோனுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | 200 வருசத்துல முதல் முறை.. மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. அமைச்சர் முன் ஜோராக நடந்த திருமணம்!!..

SIVAGANGAI, DRINKING WATER, WATER CONNECTION, COURT ORDER

மற்ற செய்திகள்