Kadaisi Vivasayi Others

ரோட்டு சைடில் கிடந்த பை.. தூய்மை பணியாளர் எடுத்து உள்ளே பார்த்தபோது.. இத இங்க கொண்டு வந்து போட்டது யாரு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: சென்னையில் சாலை ஓரம் இருந்த பையில் வெள்ளி சிலை கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோட்டு சைடில் கிடந்த பை.. தூய்மை பணியாளர் எடுத்து உள்ளே பார்த்தபோது.. இத இங்க கொண்டு வந்து போட்டது யாரு?

கழுத்தில் QR code.. செல்போனில் UPI வாலட்.. டிஜிட்டல் யாசகம் பெறும் இந்த மனிதன் யார்?

தொடரும் கடத்தல் சம்பவங்கள்:

சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள், வெளிநாட்டில் இருந்து தங்கம் என ஏராளமான கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது இந்த கடத்தல் சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. அதுவும் கடத்தலுக்கு போடப்படும் திட்டங்கள் தான் படு சுவாரஸ்யமானவ.

இதற்காகவே தனி படிப்பு படித்து விட்டு வந்திருப்பார்களா என்று யோசிக்க தோன்றும் வண்ணம் ஒவ்வொரு கடத்தல் கதையும் இருக்கும். இதெல்லாம் சினிமா திரைக்கதைகளில் கூட யோசித்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில், பொது இடங்களில் இருந்து சிலைகள் கண்டுபிடிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த வாரத்தில் கூட நெல்லை மாவட்டம் நான்குநேரி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஐம்பொன் சிலைகள் கிடைத்தது.

சாலையோரத்தில் கிடந்த பை:

சென்னை கே.கே நகர் பகுதியில் 137-வது வார்டுக்கு உட்பட்ட ராமசாமி சாலையில் எப்போதும் போல நேற்று காலை துப்புரவுப் பணியாளர் அம்மு தூய்மைப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார். அந்நேரத்தில் சாலை ஓரத்தில் ஒரு பை கிடந்துள்ளது. தூய்மை பணியாளர் அம்மு அதையெடுத்து பார்த்தபோது அதில், வெள்ளியால் செய்யப்பட்ட, சூலம் ஏந்திய அம்மன் சிலை இருந்தது தெரியவந்ததுள்ளது.

எப்படி இங்கே வந்தது?

உடனடியாக அம்மு சாலையில் இருந்த பை குறித்து துப்புரவு ஆய்வாளரிடம் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த துப்புரவு ஆய்வாளர் வெள்ளி சிலையை, கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வரும் போலீசார் இந்த பை யாருடையது, எப்படி அங்கு வந்தது என்பது குறித்து கே.கே.நகர் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதைத் தடுக்கும் பணியில் மாநில தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ள நிலையில், சாலையோரத்தில் வெள்ளி சிலை கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உன் ஹஸ்பண்ட் மேரேஜ் ஃபோட்டோ அனுப்புறேன், பாரு.. ஐயோ, இது என்னோடது.. மணமேடையில் வைத்து கைதான மணமக்கள்

SILVER STATUE, ROAD SIDE, BAG, CHENNAI, தூய்மை பணியாளர், சாலை ஓரம், பை, சென்னை

மற்ற செய்திகள்