மரணமடைந்த மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி.. அதிசயிக்கத்தக்க அம்சத்தை கொண்டதாம்! ஆயிரத்திற்கு ஒரு யானைக்கு மட்டும் தான் சாத்தியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியின் சிறப்பம்சம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read | 51 வருடத்திற்கு பிறகு கிடைத்த மகள்.. துடைக்கப்பட்டது தாய் மீது விழுந்த பழி... பதற வைக்கும் சதி அம்பலம்!!
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நேற்று காலை மரணமடைந்தது.
பிரபலமான புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு புதுச்சேரி முதலமைச்சராக ஜானகிராமன் இருந்த போது தனியார் நிறுவனம் மூலம் ஐந்து வயதான லட்சுமி என்ற பெண் யானை விநாயகர் கோயிலுக்கு அளிக்கப்பட்டது.
மணக்குள விநாயகர் கோயில் வளாகத்திலேயே லட்சுமி யானை ஓய்வெடுத்தது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் இந்த லட்சுமி யானை 48 நாள் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை நடைப்பயிற்சியின் போது கல்வே கல்லூரி அருகே சென்ற போது மயங்கி விழுந்த யானை அங்கேயே உயிரிழந்தது என கூறப்படுகிறது.
யானையின் மரணத்தால் மணக்குள விநாயகர் கோயில் நடை நேற்று சாத்தப்பட்டது. யானையின் உடலுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். யானையின் உடல் வனத்துறைதக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த லட்சுமி யானைக்கு பக்தர்கள், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், புதுவை முன்னாள் முதல்வர் நாரயணசாமி உள்ளிட்டோரும் நேரில் வந்து கண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இந்த லட்சுமி யானையின் சிறப்பம்சம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. “பொதுவாக ஆசிய பெண் யானைகளுக்கு தந்தம் இருப்பது வெளியே தெரியாது. ஆனால் லட்சுமிக்கு, வளர்ந்திருப்பது சிறப்பான ஒன்று. ஆயிரத்தில் ஒரு யானைக்குதான் இது போன்று வளரும்” என புதுச்சேரி வனத்துறை காப்பாளர் வஞ்சுளவள்ளி கூறியுள்ளார்.
தந்தம் இருப்பதால் விஷேசமான யானையாக லட்சுமி பக்தர்களால் கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்