'அவங்க பெர்மிசன் கொடுக்கல, இல்லனா...' 'தடுப்பூசி குறித்து சித்தார்த் எழுப்பிய குற்றச்சாட்டு...' - பதில் அளித்த நெட்டிசன்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் திரைப்பட நடிகரான திரு.சித்தார்த் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும், அநீதிகளுக்கும் தன் கருத்துக்களை பதிவிட எப்போதும் தயங்கியதில்லை.

'அவங்க பெர்மிசன் கொடுக்கல, இல்லனா...' 'தடுப்பூசி குறித்து சித்தார்த் எழுப்பிய குற்றச்சாட்டு...' - பதில் அளித்த நெட்டிசன்கள்...!

பல நடிகர்கள் பேச தயங்கும் நாட்டு நடப்புகளை சித்தார்த் பகிரங்கமாக எடுத்து வைப்பார். அதற்கு ஆதரவும், எதிர்ப்புகளும் இருந்து வருகிறது. இந்நிலையில் சித்தார்த் போட்ட ஒரு ட்வீட் தற்போது வைரலாகியுள்ளது.

 

அதில், மத்திய அரசாங்கம் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை தடுப்பதாகவும், அவ்வாறு தடுக்காமல் இருந்தால் பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை தங்களின் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என கூறியிருந்தார்.

மேலும் நேரடியாக தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்களும், மாநில அரசும் வாங்க முடியாமல் இருப்பது ஏன் எனவும், ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி பயன்படுத்தாமல் இருக்கும் காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரின் இந்த பதிவிற்கு பலரும் பதில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அரசு எந்த வித கார்ப்பரேட் நிறுவனங்களையும் தடுப்பூசி போடுவதை தடுக்கவில்லை என்றும், சித்தார்த் தவறான கருத்துக்களை பதிவிடுகிறார் எனவும் கூறிவருகின்றனர்.

 

அதோடு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு மருத்துவமனைகளோடு இணைந்து தடுப்பூசி முகாம்களை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியா மாதிரியான படிப்பறிவில்லாதவர்கள் அதிகம் காணப்படும் நாட்டில் தடுப்பூசியை அவ்வளவு எளிதாக மக்களிடம் கொண்டுப்போய் சேர்க்க முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்