'இந்த பொட்டலத்த ஸ்மெல் பண்ணினாலே போதும்...' 'கொரோனாவால வாசனை, ருசி தெரியாதவங்களுக்கு செமயா workout ஆகுது...' இத எப்படி பண்றது...? - சித்த மருத்துவர்கள் அசத்தல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸினால் வாசனை நுகரும் திறன் இழப்பை மீட்டெடுக்கும் விதமாக சிறந்த மருந்து பொட்டலம் ஒன்றை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் முக்கியமான அறிகுறியாக கருதப்படுவது மூக்கில் வாசனையை நுகரும் திறன் மற்றும்நாக்கின் சுவை அறியும் திறனும் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த அறிகுறிகள் காணப்பட்டால் கொரோனா தொற்று அரிகுறியாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட 80 சதவீதம் பேர் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இல்லாதோர் என்றாலும், பெரும்பான்மையானோருக்கு வாசனை அறியும் நுகரும் திறன் மற்றும் நாக்கின் சுவைக்கும் திறன் இல்லாமல் காணப்படுகிறது.
சிகிச்சை முடிந்த பிறகு கொரோனா வைரஸ் தொற்று நெகடிவ் என மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்தவர்களுக்கும் மூக்கில் நுகரும் தன்மையும், நாக்கின் சுவைக்கும் திறன் இல்லாமல் இருப்பது என்ற கவலை பலரிடமும் காணப்படுகிறது.
கொரோனாவுக்கான சித்த மருத்துவச் சிகிச்சை மையங்களில் நுகரும் மற்றும் சுவைக்கும் திறனை மீட்டெடுப்பதற்காக ஓமப் பொட்டலம் வழங்கி அதனை அடிக்கடி முகர்ந்து வாசனைப் பிடிக்கச் சொல்கிறார்கள்.
இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் முகர்ந்து ஓமப் பொட்டலத்தின் வாசனை பிடிக்கிறவர்களுக்கு மூக்கின் நுகரும் திறன் பழையபடி மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவச் சிகிச்சை முகாமில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உம்மல் ஜதிஜா தலைமையிலான குழுவினர் ஓமப் பொட்டலத்தை வழங்குகின்றனர். கடந்த ஆகஸ்ட். 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த முகாமில் தற்போது வரை நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதில் பெரும்பாலானோருக்கு வாசனை நுகரும் திறன் அற்று காணப்பட்டனர், ஓமப்பொட்டலம் கொண்டு நுகர்ந்து மீட்டெடுத்துள்ளனர். இதுகுறித்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தெரிவித்தபோது, 'கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு எங்களது சொந்த விருப்பத்தின் பேரில் சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தில் சேர்ந்து சிகிச்சை எடுத்தோம்.
ஆரம்பம் முதலே நுகரும் திறன் இல்லை. இங்கு வழங்கப்பட்ட ஓமப்பொட்டலத்தைத் தொடர்ந்து பயன்படுத்தியதால் வீடு திரும்பும் முன்பே நுகரும் திறன் மீண்டுள்ளது' என ஒருவர் தெரிவித்துள்ளார். ஓமப் பொட்டலம் குறித்து சித்த மருத்துவர் ஒருவர் கூறியபோது, 'சித்த மருத்துவத்திலுள்ள 32 புற மருந்துகளில் ஒன்று ஓமப் பொட்டலம். அரை கிலோ ஓமத்தை, ஒரு கவுளி வெற்றிலையை அரைத்துப் பிழிந்த சாற்றில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு, வெயில் இல்லாத நிழலில் காய வைத்து 50 கிராம் கிராம்பு, 25 கிராம் பச்சைக் கற்பூரம் சேர்த்து ஓமத்தை நன்றாக அரைக்க வேண்டும். இந்தப் பொடியை 5 கிராம் அளவில் தூய்மையான துணியில் முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டால் ஓமப் பொட்டலம் தயாராகி விடும்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை இந்தப் பொட்டலத்தை மூக்கில் வைத்து நுகர்ந்தால் ஒருசில நாட்களில் முகரும் திறன் மீண்டு பழையபடி ஆகிவிடும். சுவாசப் பாதையிலுள்ள கோளாறுகள், அடைப்புகள் சீரடைவதுடன் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் சீரடையும் என்பது இந்தப் பொட்டலத்தின் சிறப்பு என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்