'தொடரும் கன மழை'... 'தயாரான செம்பரம்பாக்கம் ஏரி'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுப்பணித்துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் ஏரியைத் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

'தொடரும் கன மழை'... 'தயாரான செம்பரம்பாக்கம் ஏரி'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுப்பணித்துறை!

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகரில் பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. முழு கொள்ளளவு 24 அடி கொண்ட சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் எனவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 4,027 கன அடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்துக்கு ஏற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து உதவிப் பொறியாளரும் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்